புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் – ஆளுநர் உரையுடன் தொடக்கம்!
புதுச்சேரியில் புதிய முதல்வராக என். ரங்கசாமி பதவி ஏற்ற பின்னர் முதல் நிதிநிலை அறிக்கை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது. அதன்படி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சட்டப்பேரவையில் தமிழில் உரையாற்றுகிறார்.
நிதிநிலை அறிக்கை:
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் காரணமாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதன் பின்னர் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததால் மத்திய அரசே நேரடியாக புதுவையின் 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. தற்போது தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் உரையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணிக்கு பேரவை துணைத் தலைவர் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகிறது. அதன் பின் மாலை 4.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
மேலும் நிதிநிலை அறிக்கைக்காக 10 ஆயிரத்து 100 கோடி மதிப்பீட்டில் திட்டவரையை தயார் செய்து மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைத்தது. இந்த கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், உள்ளிட்ட பலர் டெல்லி சென்று கூடுதல் நிதி மற்றும் திட்டங்களை புதுச்சேரிக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை வலியுறுத்தி உள்ளார். எனவே மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னர் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
இக்கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உரையாற்றிய பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி ஏற்றுக கொள்ள உள்ளார். அதன் பின்னர் இன்று பிற்பகல் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், 2021-2022 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக புதுச்சேரி ஆளுநர் உரையும், பட்ஜெட் தாக்கலும் ஒரே நாளில் வருவது குறிப்பிடத்தக்கது.