‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீசன் 2 – அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

1
'உள்ளம் கொள்ளை போகுதடா' சீசன் 2 - அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
'உள்ளம் கொள்ளை போகுதடா' சீசன் 2 - அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீசன் 2 – அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியடைந்த ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியலின் 2ம் பாகம் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் தினசரி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய சீரியல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘உள்ளம் கொள்ளை போகுதடா’. அதாவது தமிழ் டிவி சேனல்களில் மாற்று மொழி சீரியல்கள் ஒளிபரப்பப்பட்ட காலத்தில் வெளியாகி மக்களின் மனம் கவர்ந்த சீரியல் என்றால் அது ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ தொடர் தான். குடும்பத்தின் பொறுப்புகளை சுமந்து தனக்கென தனி வாழ்க்கையை வாழாமல் இருக்கும் ராம் மற்றும் ப்ரியா இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.

விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

அதிகளவு வயது வித்தியாசம் கொண்ட இவர்கள் இருவரும் திருமண பந்தத்துக்குள் நுழையும் போது அவர்களின் வாழ்வில் நடைபெறும் மோதல் மற்றும் காதல் சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியலின் கதைக்களம் ஒளிபரப்பானது. அந்த வகையில் ஓரிஜினலாக ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட இந்த சீரியல் பாலிமர் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தினமும் இரவு 7 மணியளவில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

டிக்டாக் பிரபலம் சுகந்தி தேனியில் திடீர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில் மீண்டுமாக ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியலின் 2ம் பாகம் தமிழ் மொழியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த சீரியலின் 2ம் பாகம் புதிய முகங்களை வைத்து தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள டப்பிங் எபிசோடுகள் வரும் நவ.8ம் தேதி முதல் தினசரி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தகவல் ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here