நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

0
நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

பிரதமர் ஆலோசனை:

நாடு முழுவதும் கடந்த வருட மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பின்னர் நோய்த்தொற்று குறைந்ததை தொடர்ந்து அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலவரங்கள் அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்க, தளர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கடந்த சில வாரங்களாக தினசரி நோய் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தினசரி 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. இதனால் மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. எனவே நாடு தழுவிய பொதுமுடக்கத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி உள்ளனர்.

LIC ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை – மத்திய அரசு அனுமதி!!

இதற்கிடையில் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தடுப்பூசி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என கேள்விகள் எழுந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here