இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளின் தரம் உயர்வு – பிரதமர் மோடி அறிவிப்பு!

0
இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளின் தரம் உயர்வு - பிரதமர் மோடி அறிவிப்பு!
இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளின் தரம் உயர்வு - பிரதமர் மோடி அறிவிப்பு!
இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளின் தரம் உயர்வு – பிரதமர் மோடி அறிவிப்பு!

டெல்லியில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி அவர்கள் பள்ளிகளின் தரம் உயர்த்துவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகளின் தரம்

இந்தியாவில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. இந்த நல்லாசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல் மேற்கொண்டார். மேலும் நாட்டில் பள்ளிகளின் தரத்தை உயர்த்த 14500 மாதிரி பள்ளிகளை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் 14500 பள்ளிகள் பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைஸிங் இந்தியா திட்டத்தின் (PM-SHRI) கீழ் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பள்ளிகள் மாணவர்களிடம் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், கற்றலை மையப்படுத்தி கற்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளும். அத்துடன் இந்த பள்ளிகளில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்!

இதனை தொடர்ந்து மத்திய அரசுப் பள்ளிகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் பள்ளிகளில் இருந்து இத்திட்டத்திற்கான பள்ளிகள் தேர்வு செய்யப்படும். மேலும் இந்த பள்ளிகளில் பள்ளிகளில் நவீன கட்டமைப்பு, சோதனைக் கூடங்கள், நூலகங்கள், விளையாட்டு சாதனங்கள், கலை அரங்குகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். அத்துடன் இந்த பள்ளிகள் மாணவ, மாணவிகளிடம் கேள்வி கேட்கத் தூண்டும் வகையிலும், கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் கற்பிக்கப்படும். இது எதிர்காலத்தில் மாணவர்கள் சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!