
2030 ஆம் ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு – டிக்கெட் விலை இவ்வளவா? இஸ்ரோ வெளியிட்ட தகவல்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ 2030 ஆம் ஆண்டு முதல் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சுற்றலா செல்ல ஒருவருக்கு ரூ. 6 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா அறிவிப்பு
தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் பலர் பல புது இடங்களுக்கு செல்ல ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி 2030 ஆண்டில் விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்து செல்லும் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறது.
தமிழக அரசின் பட்ஜெட் நாளை (மார்ச் 20 ) தாக்கல் – திட்டங்கள் குறித்த முழு விவரம்!
மேலும் இந்த சுற்றுலா செல்ல ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 6 கோடி ருபாய் என தெரிவித்துள்ளது. ரூ 6 கோடி ரூபாய்க்கு நிலா வரை அளித்து செல்வார்களா என கேட்டால் இல்லை. பூமியை தரைமட்டத்தில் இருந்து வளிமண்டலத்தின் விளிம்பில் உள்ள துணை சுற்றுப்பாதையில் 15 நிமிடம் குறைந்த புவிஈர்ப்பு விசை நிலையை மட்டுமே அனுபவிக்க முடியும். இது குறித்து பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் 2030ல் கட்டாயம் மனிதர்கள் விண்வெளிக்கு சுற்றுலா செல்வார்கள்.
Exams Daily Mobile App Download