பள்ளி மாணவர்களுக்கான புத்தக சுமையை குறைப்பதற்கான திட்டம் – மத்திய அரசு தகவல்!

0
பள்ளி மாணவர்களுக்கான புத்தக சுமையை குறைப்பதற்கான திட்டம் - மத்திய அரசு தகவல்!
பள்ளி மாணவர்களுக்கான புத்தக சுமையை குறைப்பதற்கான திட்டம் - மத்திய அரசு தகவல்!
பள்ளி மாணவர்களுக்கான புத்தக சுமையை குறைப்பதற்கான திட்டம் – மத்திய அரசு தகவல்!

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களுக்கு புத்தக சுமையினை குறைப்பதற்கான முக்கியமான ஒரு சில திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதிய திட்டம்:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் செயல்படாமல் இருந்தது. பின்பு அரசின் தீவிர கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றால் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதற்கிடையில் மத்திய அரசானது பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வி திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் படி வழிவகை செய்யப்பட்டது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பொதுமுடக்கம், ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டது. பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் செயல்படுத்தப்பட்டன. பல மாணவர்கள் சரியான வயதில் பள்ளியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கற்றல் திறனில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மாணவர்களிடம் பள்ளிக்கு செல்லும் ஆர்வம் குறைய தொடங்கியது. இந்நிலையில் என்.சி.இ.ஆர்.டி- ஐ அமைப்பானது மாணவர்களுக்கு எளிதில் கல்வி கற்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

கொரோனா தொற்றினால் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு ஏற்பட்ட நேர விரயத்தை ஈடு செய்யவும், மேலும் தொடர்ச்சியான கற்றல் இல்லாத காரணத்தினால் மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்பட்ட இடைவெளியை சரி செய்யவும் பாட புத்தக சுமையை குறைக்க என்.சி.இ.ஆர்.டி- ஐ நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் கற்றலில் ஏற்பட்ட குறையை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து லோக் சபாவில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் அளித்துள்ளார். அதில், மாணவர்கள் கற்றலில் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக பிளஸ் 2 பாட புத்தகத்திலிருந்து 2002 குஜராத் கலவரம், அவசரநிலை பிரகடனம், நக்சல் அமைப்புக்கள், முகலாய நீதிமன்றங்கள் உள்ளிட்ட பாடங்களை என்.சி.இ.ஆர்.டி- ஐ எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கடந்த மாதம் நீக்கியதாகவும், அதற்கு பதில் மாணவர்கள் எளிதில் கற்கும் விதமாக புதிய பாட திட்டங்களை இணைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here