பெண்களுக்கு மட்டும் விதிக்கப்படும் பிங்க் வரியா? – புது தகவல்!

0
பெண்களுக்கு மட்டும் விதிக்கப்படும் பிங்க் வரியா? - புது தகவல்!

வரிகளில் பெண்களுக்கு மட்டும் தனியாக பிங்க் வரி விதிக்கப்படுவது குறித்தான முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிங்க் வரி:

மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருள்களுக்கும் வரி விதிக்கப்படுவது வழக்கமாகும். இவற்றில் வெளிப்படையாக மக்கள் செலுத்துவது வருமானவரிதான். மற்ற சேவை வரி, சரக்கு வரி, விற்பனை வரி, பரிசு வரி, ஆதாய வரி, மதிப்பு கூட்டு வரி போன்றவை அனைத்தும் பொருட்களின் விலைகளுன் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் இதை ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான தொகை மட்டுமே நிர்ணயம் செய்து வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு மட்டும் பிங்க் வரி விதிக்கப்படுவது குறித்து சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

DRDO ACEM நிறுவனத்தில் 41 காலியிடங்கள் – Engineering முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

அதாவது ஒரே அளவு ஒரே வகையான பொருட்களை ஆய்வு செய்தபோது பெண்களுக்கு தயாரிக்கப்படும் பொருட்களின் விலையை விட ஆண்களுக்கு தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாக பெண்களிடம் ரகசியமாக வரி வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்த விசாரணையில் பெண்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், மேக்கப் பொருட்கள், செயற்கை நகைகள், சானிட்டரி பேடுகள் போன்றவற்றிற்கு அதிக பணம் செலவழிக்கின்றனர். லிப்பாம் முதல் டியோடரென்ட் வரை ஆண்களுக்கான விடையை விட பெண்களுக்கான விலை அதிகமாக உள்ளது. பெண்கள் இவற்றில் அதிக ஆர்வமாக உள்ளதாகவும், அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளதாகவும் இதனாலேயே வியாபாரிகள் இந்த நூதன முறையில் பணம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!