உங்களின் PF பணத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டுமா? 4 Simple Ways! முழு விவரம் உள்ளே!

0
உங்களின் PF பணத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டுமா? 4 Simple Ways! முழு விவரம் உள்ளே!
உங்களின் PF பணத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டுமா? 4 Simple Ways! முழு விவரம் உள்ளே!
உங்களின் PF பணத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டுமா? 4 Simple Ways! முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்களை வழங்கி வருகிறது. தற்போது உங்களின் PF பணத்தின் இருப்பு தொகையை ஆன்லைன் வாயிலாக சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

ஓய்வூதிய தொகை:

நாட்டில் அரசு ஊழியர்களுக்கு இபிஎஃப் திட்டம் 1952, ஓய்வூதியத் திட்டம் 1995 (இபிஎஸ்) மற்றும் காப்பீட்டுத் திட்டம் 1976 (இடிஎல்ஐ) உள்ளிட்ட 3 வகையான திட்டங்களை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உங்களின் ஓய்வூதிய தொகையின் இருப்பு தொகை மற்றும் பிற விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை.

குடிமைப்பணி தேர்வுகளுக்கான வயது வரம்பு தளர்வு – தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!!!

Follow our Instagram for more Latest Updates

அதாவது நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் உங்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பை சரிபார்க்க 4 வழிமுறைகளை EPFO நிறுவனம் வழங்கியுள்ளது. நீங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு ‘EPFOHO UAN’ என்று டைப் செய்து SMS அனுப்புவதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இதில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விவரங்களை பெறலாம்.

இதே போல் 9966044425 என்ற எண்ணிற்கு Missed Call கொடுப்பதன் மூலமாகவும் உங்களின் பிஎஃப் பங்களிப்பு மற்றும் இருப்புத் தொகையை குறித்த விவரங்களை பெறலாம். இதனை தொடர்ந்து, epfindia.gov.in என்ற இ-சேவா இணையதளத்தில் உங்களின் யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடுவதன் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும் ஆப் ஸ்டோர், கூகுள் ப்ளே, விண்டோஸ் ஸ்டோர் ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி உமாங் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலியிலும் உங்களின் விவரங்களை உள்ளிட்டு இபிஎஃப் பற்றி அறியலாம்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!