தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 380வது நாளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை:

பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் மற்றும் சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை ஏற்ற, இறக்கம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதாவது, தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி பெட்ரோல், டீசலின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. அதாவது, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 110. 85 ரூபாய்க்கும், டீசல் விலை 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் – கிராம் ரூ. 5570க்கு விற்பனை!

இதன் பின்னர், தமிழகத்தில் பெரிதளவில் விலையேற்றம் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனுடையே, கடந்த 2022 ஆம் ஆண்டு மே 21ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மிதன கலால் வழி லிட்டருக்கு ரூ.7.5 ஆகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்து இருந்தார். இதனால், பெட்ரோலின் விலை குறைந்து ஒரு லிட்டர் 102.63 ரூபாயாகவும், டீசலின் விலை லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் 380 வது நாளாவதாக பெட்ரோல், டீசலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!