மேலும் 6 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் மேலும், 6 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 16 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. நேர்மறை விகிதம் 5% க்கும் குறைவாக உள்ள மாவட்டங்கள் முதல் வகைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மைசூர் உள்ளிட்ட மாவட்டங்கள் 5% க்கும் அதிகமான நேர்மறை விகிதத்தை கொண்டுள்ளது.
தமிழகத்தில் டெபாசிட் வசதியுடைய ATM களில் பணம் எடுக்க தடை!
தொடர்ந்து, உடுப்பி, பெங்களூரு கிராமப்புற, சிவமோகா, பல்லாரி, சித்ரதுர்கா மற்றும் விஜயபுரா மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக நேற்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இங்கு பேருந்து போக்குவரத்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடக அரசு ஜூன் 21 நள்ளிரவு வரை பெங்களூருவில் பொது இடங்களில் 4க்கும் மேற்பட்டவர்கள் கூட தடை விதிக்கும் பிரிவு 144ன் கீழ் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.
TN Job “FB
Group” Join Now
பாகல்கோட், பல்லாரி, பெங்களூரு நகரம், பீடர், சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா, தார்வாட், கடக், ஹவேரி, கலாபுராகி, கோலார், கொப்பல், ரைச்சூர், ராமநகர், துமுகூர், உடுப்பா, உத்தரி, உத்தரா போன்ற 19 மாவட்டங்களில் ஜூன் 14ம் தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு, பூங்காக்கள் மற்றும் தொழில்துறை பிரிவுகள் போன்றவை திறக்கவும், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் அதிக நேரம் திறப்பது, ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் அதிகபட்சம் இரண்டு பயணிகளுடன் செல்ல அனுமதி போன்ற தளர்வுகளை அளித்துள்ளது.