மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் கவனத்திற்கு – பென்ஷன் திட்டம் ஒரு விளக்கம்!

0
மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் கவனத்திற்கு - பென்ஷன் திட்டம் ஒரு விளக்கம்!
மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் கவனத்திற்கு - பென்ஷன் திட்டம் ஒரு விளக்கம்!
மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் கவனத்திற்கு – பென்ஷன் திட்டம் ஒரு விளக்கம்!

மாத சம்பளம் பெறும் ஒரு அலுவலக ஊழியர் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி தொகை மற்றும் ஓய்வூதிய கணக்கு தொடர்புடைய விளக்கங்கள் மற்றும் வித்தியாசங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

PF கணக்கு

பொதுவாக மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு மாத ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 12% வருங்கால வைப்பு நிதி சேமிப்பு கணக்கில் செலுத்த வேண்டும். இது தவிர ஊழியர்கள் வேலை பார்க்கும் அந்தந்த நிறுவனங்களும், ஒவ்வொரு ஊழியர்களின் PF கணக்குகளில் 12% தொகையை செலுத்தும். ஆனால் இந்த மொத்த தொகை ஊழியர்களின் வைப்பு நிதி கணக்கில் சேமிக்கப்படுவது கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அக்.6 முதல் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – அறிவிப்பு வெளியீடு!

இதை உறுதிபடுத்துவதற்காக ஊழியர்கள் அவர்களின் PF கணக்கை எடுத்து பார்த்தாலே தெரியும். குறிப்பாக ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்தும் பணத்தின் மதிப்பு தனித்தனியாக பட்டியலிடப்பட்டிருக்கும். இது தவிர ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் (EPS) என்ற பிரிவின் கீழ் ஓய்வூதிய திட்டத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் பணத்தின் விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். இப்போது இந்த பென்சன் தொகையில் ஊழியர்கள் பங்களிப்பு தரத்தேவையில்லை.

ஆனால் நிறுவனங்கள் செலுத்தும் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணம் பென்சன் திட்டத்திற்கு செலுத்தப்படும். ஒரு மாத ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ .15,000 ஆக இருந்தால் EPSக்கு 8.33% வரை செலுத்தப்படும். சுருங்க கூறின் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் நிறுவனத்தின் பங்களிப்பில் இருந்து ரூ.125 EPSக்கு செலுத்தப்படும். இப்போது மாதாந்திர ஓய்வூதியம், ஊழியர்களின் வேலை ஆண்டுகள் மற்றும் கணக்கீடுகள் அடிப்படையில் அமைக்கப்படுகிறது.

அந்த வகையில் ஊழியரின் குறைந்தபட்சம் 10 ஆண்டு கால பணிக்கு மாதத்திற்கு ரூ.1000 என்ற அளவில் ஓய்வூதியம் வழங்கப்படும். இதை விட அதிகமான ஆண்டுகளுக்கு ரூ. 7500 வரை ஓய்வூதியம் வழங்கப்படும். இப்போது இந்த ஓய்வூதிய திட்டம் மற்றும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வித்தியாசம் குறித்து பேசுகையில், ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி இல்லை. இந்த திட்டத்தின் கீழ் பணத்தின் முழு கார்ப்பஸூம் அரசு நிர்வகிக்கும்.

IPL 2021: பிளே ஆப் செல்லுமா ராஜஸ்தான்? வாழ்வா – சாவா ஆட்டத்தில் சென்னையுடன் மோதல்!

தொடர்ந்து ஊழியர் மற்றொரு நிறுவனத்தில் வேலைக்கு சென்றால் EPF மட்டும் புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். UNA மாறாது. ஆனால் ஒரு ஊழியர் தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றால் அவர் EPS பணம் அல்லது திட்ட சான்றிதழை பெறலாம். அந்த ஊழியர் புதிய நிறுவனத்தில் சேரும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்ட சான்றிதழை EPFOக்கு அனுப்பும். அந்த வகையில் 10 ஆண்டுகள் முடிந்தவுடன் திரும்பப் பெறும் நன்மைகள் நிறுத்தப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!