பத்துப்பாட்டு நூல்கள்

0

சங்க இலக்கியங்கள்

 • கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும்.
 • சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
 • சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.
 • சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.
 • பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
 • சங்க இலக்கியங்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

 • பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள்.
 • பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் பன்னிரு பாட்டியல்.
 • பதினெண் மேற்கணக்கு நூல்கள் இருவகைப்படும்.அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஆகும்.

பத்துப்பாட்டு நூல்கள்

 • பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியத் தொகைநூல்களுள் ஒன்று.
 • இத்தொகைநூலுள் பத்துப்பாடல்கள் அடங்கியுள்ளன.
 • இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.
 • வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது.
 • பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

புறப்பொருள் பற்றிய நூல்கள்:

 • திருமுருகாற்றுப்படை
 • பொருநராற்றுப்படை
 • சிறுபாணாற்றுப்படை
 • பொரும்பாணாற்றுப்படை
 • மலைபடுகடாம்
 • மதுரைக்காஞ்சி

அகப்பொருள் பற்றிய நூல்கள்:

 • குறிஞ்சிப்பாட்டு
 • பட்டினப்பாலை
 • முல்லைப்பாட்டு

அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

 • நெடுநல்வாடை
நூல்கள்ஆசிரியர் பாடல் அடி பாட்டுடைத் தலைவன்குறிப்பு
திருமுருகாற்றுப்படைநக்கீரர்317முருகன் பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை.ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.
பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்248சோழன் கரிகாலன்கரிகால சோழன், பொருநரை அனுப்பும் போது  ஏழு அடி காலால் நடந்து சென்று வழியனுப்புவான்.கரிகாலனின் வெண்ணிப்பறந்தலை வெற்றி கூறப்பட்டுள்ளது.பொருநர் இசைவிழா, விரலி வருணனை, கரிகால சோழனின் விருந்து உபசரிப்பு போன்றவை கூறப்பட்டுள்ளது.
சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்269நல்லியக்கோடன்தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை” என்கிறார்.திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும். நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்” .இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல உமணர்கள் வீட்டில் குரங்குகளை வளர்த்தனர்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங் கண்ணனார்500தொண்டைமான் இளந்திரையன்யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.நெல்லரிசி கொண்டு மது தயாரித்தல் பற்றி குறிப்பிடுகிறது.
மலைபடுகடாம்பெருங்கௌசிகனார்583நன்னன் சேய் நன்னன்ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது. நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளது
குறிஞ்சிப்பாட்டுகபிலர்261ஆரிய அரசன் பிரகதத்தன் ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இயற்றியது.அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது. கோவை நூல்களுக்கு குறிஞ்சிப்பாட்டு வழிக்காட்டியது என்பர். 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார்
முல்லைப்பாட்டுநப்பூதனார்103பாண்டியன் நெடுஞ்செழியன்பத்துப்பாட்டுள் சிறிய நூல் இதுவே.முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் சிறப்பாக கூறப்பட்டுள்ளன.
பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங் கண்ணனார்301சோழன் கரிகாலன்பட்டினப்பாலை பாடியமைக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.இந்நூலுக்கு வஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது.பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளது.
நெடுநல்வாடைநக்கீரர்188பாண்டியன் நெடுஞ்செழியன்நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.“கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்.பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.இதில் கூறப்பட்டுள்ள பாசறை கூதிர் பாசறை
மதுரைக்காஞ்சிமாங்குடி மருதனார்782பாண்டியன் நெடுஞ்செழியன்தொல்காப்பியரின் காஞ்சித்திணை நிலையாமை பற்றியது; புறப்பொருள் வெண்பா மாலையின் காஞ்சித் திணை போர் பற்றியது.பத்துப்பாட்டின் அதிக அடிகளை கொண்டது.பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகுவளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.மதுரையின் நாள் அங்காடியும்(பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்.மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here