தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்கள் – ஆன்லைன் மூலம் விநியோகம்! தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்கள் - ஆன்லைன் மூலம் விநியோகம்! தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்கள் - ஆன்லைன் மூலம் விநியோகம்! தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்கள் – ஆன்லைன் மூலம் விநியோகம்! தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (தாள் 1 மற்றும் தாள் 2) தேர்ச்சி சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாக இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்ச்சி சான்றிதழ்

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2012, 2013, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கான தேர்ச்சி சான்றிதழ்களின் மறுபிரதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தேர்ச்சி சான்றிதழ்கள் விநியோகம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் (தகுதித் தேர்வு) மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

THDC-ல் Engineer Trainee வேலைவாய்ப்பு – 52 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

அதில் 2012, 2013, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் மறுபிரதி சான்றிதழ்கள் ஆன்லைன் மூலமாக வழங்க இருப்பதால் அதனை கேட்டு வரும் விண்ணப்பங்கள் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் மறுபிரதி சான்றிதழ்கள் கோரும் விண்ணப்பதாரர்களை இ சேவை மையத்தை அணுகி மறுபிரதி கட்டணத் தொகை ரூ. 200 மற்றும் இ-சேவை மைய சேவை கட்டணம் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ள அறிவுறுத்தும்படி முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!