தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை மறு தேர்தல்? – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

0
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை மறு தேர்தல்? - தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மறு வாக்குப்பதிவு மீண்டும் நடைபெறுமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

மறுவாக்குப்பதிவு:

மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியான நேற்று தமிழகம்  முழுவதும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. காலை 7.00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவுகள் அந்தந்த தொகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு பொது அலுவலகங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா  சாகு அவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தேர்தல் முடிந்தாலும் கண்காணிப்பு தொடரும் – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

இதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி தமிழகத்தின் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் உள்ள கள  நிலவரங்கள் நேரடி சோதனையாளர்கள் வாயிலாக கேட்டு அறியப்பட்டு மற்றும் தனிப்பட்ட கட்சிகளின் கோரிக்கை எழுப்பப்பட்டால் இது குறித்தான ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம்  முழுவதும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் தேர்தல் சுமூகமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!