தேர்தல் முடிந்தாலும் கண்காணிப்பு தொடரும் – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

0
தேர்தல் முடிந்தாலும் கண்காணிப்பு தொடரும் - தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

தமிழகத்தில் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுவை தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 72.09% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் முடிந்து விட்டதால் தேர்தல் சோதனைகளில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுக்களை பல இடங்களில் கலக்க இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசில் ரூ.56,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ளது. ஆனால் கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்கள் தேர்தல் நடக்கும் வரை அந்தந்த மாநிலங்களை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் மற்றும் தேவைக்கேற்ப பறக்கும் படி நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளார். கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டாலும் தேர்தல் கமிஷனர் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கின்றன. அதனால் விதிகளில் எந்தவித தளர்வும் இருக்காது. மேலும் வீடியோ குழுக்களின் கண்காணிப்பு மறுவாக்குப் பதிவு இருந்தால் அதுவரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!