தனத்தின் பிறந்தநாளுக்காக வந்த குடும்பத்தினர், சமைத்து அசத்திய மீனா ஐசு – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தனத்தின் பிறந்தநாளுக்காக வந்த குடும்பத்தினர், சமைத்து அசத்திய மீனா ஐசு - இன்றைய
தனத்தின் பிறந்தநாளுக்காக வந்த குடும்பத்தினர், சமைத்து அசத்திய மீனா ஐசு - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தனத்தின் பிறந்தநாளுக்காக வந்த குடும்பத்தினர், சமைத்து அசத்திய மீனா ஐசு – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் பிறந்தநாளுக்காக முல்லையின் அம்மா அப்பா மற்றும் தனத்தின் அம்மா அண்ணன் அண்ணி மற்றும் மீனாவின் அம்மா அப்பா என அனைவரும் வருகின்றனர். பின் மீனா ஐஸ்வர்யா சமைத்ததில் ஐஸ்வர்யாவின் சாப்பாடுகளுக்கே அதிக வாக்குகள் கிடைக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் பிறந்தநாளுக்கு மூர்த்தி கவர் ஒன்றை கொடுக்கிறார். அதில் என்ன இருக்கும் என தெரியாமல் அனைவரும் ஆர்வமாக இருக்க ஐஸ்வர்யா அதை வாங்கி பிரித்து பார்க்கிறார். அதில் ரூபாய் 500 மட்டும் இருக்க எல்லாரும் மூர்த்தியை கிண்டல் செய்கின்றனர். பின் தனம் மாமாவிற்கு அவ்வளவு தான் தெரியும் என சொல்ல, மூர்த்தி நான் வாட்ச் வாங்கலாம் என கடைக்கு சென்றேன் அங்கே 4000 ரூபாய்க்கு கம்மியாக வாட்ச் இல்லை என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது தனத்தின் அம்மா கஸ்தூரி ஜெகா என அனைவரும் வருகின்றனர். தனத்தின் அம்மா மோதிரம் வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறார். அப்போது கஸ்தூரி மருமகளுக்கு கொடுக்காமல் எல்லாம் மகளுக்கே கொடுங்கள் என சொல்கிறார். பின் முல்லையின் அப்பா வருகிறார். அவர் தனத்திற்கு வாழ்த்து சொல்ல அம்மா எங்கே என முல்லை கேட்கிறார். பின்னால் வருவதாக சொல்ல, பின் மீனாவின் அப்பா அம்மாவும் வருகின்றனர். இதெல்லாம் உங்க பிறந்தநாள் சப்ரைஸ் என சொல்ல, தனம் சந்தோசப்படுகிறார்.

மீனாவின் அம்மா தனத்திற்கு புடவை வாங்கி கொண்டு வந்திருக்க தனம் அதை பார்த்து நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் அனைவரும் ஒற்றுமையாக பேச இன்று ஐஸ்வர்யாவும் மீனாவும் தான் சமைத்தார்கள் என சொல்கிறார். மீனாவின் அம்மா ஆமாம் மீனா நன்றாக சமைப்பாள் என சொல்ல அனைவரும் நக்கலடிக்கின்றனர். பின் மீனாவும் ஐஸ்வர்யாவும் யார் சமைத்தது எது என சொல்லாமல் சாப்பாடை கொண்டு வந்து வைக்கின்றனர்.

பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கும் ஹேமா, பாரதி கண்ணம்மாவை மேடையில் அழைத்து மரியாதை – இன்றைய எபிசோட்!

அப்போது எல்லாரும் சாப்பிட்டுவிட்டு ஒன்று ஒன்றாக நல்லா இருப்பதாக சொல்கிறார். ஐஸ்வர்யா சமைத்ததற்கே நிறைய வாக்குகள் வர மீனா கோபப்படுகிறார். மீனாவின் அம்மா அப்பா கூட ஐஸ்வர்யா சமைத்ததற்கே வாக்குகளை கொடுக்கிறார். அதனால் மீனாவிற்கு கோவம் வருகிறது. பின் ரூமிற்குள் சென்று மீனா அவர் அம்மா அப்பாவிடம் நான் சமைத்தது கூட தெரியாதா என கேட்க அப்போது மீனாவின் அப்பா நீ ஏற்கனவே சமைத்திருந்தால் எனக்கு தெரியும் என கிண்டல் செய்வது போல பேசுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here