“பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்” திறப்பு விழாவிற்கு வந்த குடும்பத்தினர், ரங்கோலி போட்டு அசத்திய ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

0
"பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்" திறப்பு விழாவிற்கு வந்த குடும்பத்தினர், ரங்கோலி போட்டு அசத்திய ஐஸ்வர்யா - இன்றைய எபிசோட்!
“பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்” திறப்பு விழாவிற்கு வந்த குடும்பத்தினர், ரங்கோலி போட்டு அசத்திய ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்துடன் புது கடை திறப்பு விழாவிற்கு கிளம்பி இருக்கின்றனர். ஐஸ்வர்யா பெரிய ரங்கோலி கோலம் போட்டு குடும்பத்தினரை சந்தோசப்படுத்துகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா பெரிய ரங்கோலி கோலம் போட்டு கலர் அடித்துக் கொண்டிருக்க, கதிர் முல்லை கடையை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பின் பலூன் எல்லாம் கட்டிவிட்டு முல்லை கதிரிடம் நன்றாக இருக்கிறதா என கேட்க சூப்பர் என கை காட்டுகிறார். பின் ஐஸ்வர்யா ரோமன்ஸ் செய்தது எல்லாம் போதும் வந்து கலர் அடிங்க என சொல்ல, முல்லையும் வந்து கலர் அடிக்கிறார். பின் தனம் பாண்டியனை கிளப்பிக் கொண்டிருக்கிறார். அவர் உன் பெயரில் கடை திறக்க போகிறோம் பெரிய பையனாக வந்தால் என் பெயரில் கடை இருக்கிறதா என கேட்டு சந்தோசப்பட வேண்டும் என சொல்கிறார்.

கண்ணம்மாவின் பிறந்தநாளில் அப்பாவை எதிர்பார்த்து இருக்கும் லட்சுமி, பாரதிக்கு சொல்ல போகும் ரகசியம் – இன்றைய எபிசோட்!

பின் பாண்டியனுக்கு என்ன ட்ரெஸ் போடுவது என தெரியாமல் இருக்க மீனா வந்து அதே பிரச்சனை தான் எனக்கும் கயலுக்கு என்ன ட்ரெஸ் போடுவது என தெரியாமல் இருக்கிறார். அப்போது பாண்டியனுக்கு மீனா ட்ரெஸ் செலக்ட் செய்து கொடுக்க கயலுக்கு தனம் கொடுக்கிறார். இருவரும் அந்த ட்ரெஸ் போட்டு விட்டு கிளப்பி விடுகின்றனர். மறுபக்கம் கண்ணனும் ஜீவாவும் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து கொடுத்து விளம்பரம் செய்கிறார். கடையை பார்த்து கிண்டல் செய்தவரை அழைத்து நீங்க கடைக்கு வந்து எந்த பொருள் வாங்கினாலும் உங்களுக்கு இலவசம் என சொல்ல, அவர் ஆச்சர்யமாக கேட்கிறார்.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

அடுத்து முல்லை வீட்டிற்கு வர, இன்னும் கிளம்பவில்லையா என கேட்கிறார். அங்கே ஐஸ்வர்யா பெரிய கோலத்தை போட்டுக் கொண்டு இருக்கிறாள் முடிக்க நீண்ட நேரம் ஆகும் போல என சொல்ல, தனம் சென்று முல்லையை கிளம்ப சொல்கிறார், முல்லை கிளம்பி வர ட்ரெஸ் அருமையாக இருப்பதாக சொல்கிறார். அப்போது கதிர் வர முல்லையை பார்த்து ரசிக்கிறார். பின் கதிர் அனைவருக்கும் பூ வாங்கி கொண்டு வர எல்லாரும் உள்ளே சென்ற பின் முல்லைக்கு பூ வைத்துவிடுகிறார். அப்போது மீனா அதை பார்த்து கிண்டல் செய்கிறார். அனைவரும் கடைக்கு வர ஏற்பாடுகளை பார்த்து அருமையாக இருப்பதாக சொல்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here