கண்ணம்மாவின் பிறந்தநாளில் அப்பாவை எதிர்பார்த்து இருக்கும் லட்சுமி, பாரதிக்கு சொல்ல போகும் ரகசியம் – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவின் பிறந்தநாளில் அப்பாவை எதிர்பார்த்து இருக்கும் லட்சுமி, பாரதிக்கு சொல்ல போகும் ரகசியம் - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவின் பிறந்தநாளில் அப்பாவை எதிர்பார்த்து இருக்கும் லட்சுமி, பாரதிக்கு சொல்ல போகும் ரகசியம் - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவின் பிறந்தநாளில் அப்பாவை எதிர்பார்த்து இருக்கும் லட்சுமி, பாரதிக்கு சொல்ல போகும் ரகசியம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணமாவின் பிறந்தநாள் அன்று லட்சுமி அப்பாவை நினைத்து ஆவலுடன் இருக்கிறார். பின் கண்ணம்மா முக்கியமான ரகசியம் ஒன்றை பாரதியிடம் சொல்ல போவதாக சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி அப்பாவை வரவேற்க பெரிய கோலம் ஒன்றை போடுகிறார். அப்போது வடிவு குமார் பார்த்து மிகவும் அழகாக இருப்பதாக சொல்ல, ரோட்டில் வருகிற கார் எல்லாத்தையும் பார்த்து இது தான் அப்பா இது தான் அப்பா என சொல்கிறார். அப்போது வடிவு அப்பா கண்டிப்பாக வருவார் நீ மிகவும் எதிர்பார்த்து ஏமாறாதே உன்னால் அம்மாவும் சோகமாக இருக்கிறார் என சொல்கிறார். அப்போது ஒரு கார் வர இது கண்டிப்பாக அப்பா தான் என லட்சுமி நினைக்கிறார். பின் கண்ணம்மாவின் அப்பா வருகிறார். அவரை பார்த்ததும் லட்சுமி உள்ளே செல்கிறார்.

ஆதார் PVC கார்டினை மொத்த குடும்பத்திற்கும் ஆன்லைனில் வாங்குவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

கண்ணம்மாவிற்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல, அவரிடம் கண்ணம்மா ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் லட்சுமி வந்து மற்றவர்கள் வரவில்லையா என கேட்க, ஷண்முகம் சௌந்தர்யாவிற்கு போன் செய்கிறார். அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் நாங்க எல்லாரும் வந்துருவோம் என சௌந்தர்யா சொல்ல, கண்ணம்மா நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என சொல்லி கிளம்புகிறார். மறுபக்கம் சௌந்தர்யா அகில் கண்ணம்மா பிறந்தநாளுக்கு நாம போறதை விட பாரதி போவது தான் முக்கியம் அவன் என்ன செய்வான் என தெரியவில்லை என்று சொல்கிறார்.

அப்போது கண்ணம்மா வர சௌந்தர்யா அகில் வேணு வாழ்த்துக்களை சொல்கிறார். இத்தனை வருஷம் இப்படி பிறந்தநாள் கொண்டாடியது இல்லை. ஆனால் இந்த வருஷம் லட்சுமி பெரியவளாக மாறிவிட்டாள் அதனால் தான் இப்படி இருப்பதாக சொல்கிறார். பின் கண்ணம்மா லட்சுமிக்கு போல உங்க பையனுக்கும் ஒரு பரிசு இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா என்ன விஷயம் என தெரியாமல் இருக்கிறார். பின் சௌந்தர்யா அதற்கு அவன் ஒப்புக் கொள்ள வேண்டுமே என கேட்க அதான் நான் நேரில் பேசுவதாக சொல்ல, பாரதி மருத்துவமனையில் இருக்கிறான் என சௌந்தர்யா சொல்கிறார்.

சரி அங்கையே நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என கண்ணம்மா கிளம்புகிறார். மறுபக்கம் பாரதி மருத்துவமனையில் டிக்கெட் எல்லாம் தேவை இல்லை என கிழித்து போட அப்போது வெண்பா வருகிறார். எதற்காக கிழித்து போடுகிறாய் இன்று மாலை தான விமானம் என கேட்க நீ இங்கே இருந்தால் கண்ணம்மா பிறந்தநாளுக்கு போயிருவானு தான டிக்கெட் போட்ட என கேட்க, ஹேமா வரவில்லை என சொல்லிவிட்டால் என சொல்கிறார். அவள் வராமல் இருந்தால் என்ன நீ கிளம்பு என வெண்பா சொல்கிறார். இப்படி என் குழந்தையின் மனதை மாற்றி வைத்திருக்காங்க என பாரதி கோவமாக இருக்க, இங்கே இருந்தாய் என்றால் கண்ணம்மா பிறந்தநாளுக்கு போக வேண்டிய நிலைமை வரும் அதனால் நீயே முடிவு செய் என வெண்பா சொல்லிவிட்டு கிளம்புகிறார்

‘குக் வித் கோமாளி’ பரத்திடம் இருந்து விலகிய செப் வெங்கடேஷ் பட் – காரணம் என்ன? ரசிகர்கள் அதிர்ச்சி!

லட்சுமி விளையாடி கொண்டிருக்க, அப்பா வந்தால் என்ன செய்வேன் என அவரது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு வடிவு கவலைப்படுகிறார். இவ்வளவு ஆசையாக லட்சுமி இருக்கிறாள் அந்த மனுஷன் வருவாரா என்ன என தெரியவில்லை என நினைக்கிறார். அப்போது லட்சுமி சண்முகத்திடம் வந்து என் அம்மாவை எப்போது இருந்து உங்களுக்கு தெரியும் என கேட்க, அவர் பேசாமல் இருக்கிறார். என் அம்மா கல்யாணத்திற்கு நீங்க வந்தீங்களா என கேட்க, உன் அம்மா கல்யாணத்திற்கு நான் வரவில்லை என சொல்கிறார். அப்போ என் அப்பாவை உங்களுக்கு தெரியுமா என கேட்க, வடிவு பேச்சை மாற்றுகிறார். ஆனால் லட்சுமி விடாமல் கேள்வி கேட்கிறார். உன் அப்பாவை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிவிட்டது எனக்கு ஞாபகம் இல்லை என சண்முகம் சொல்ல லட்சுமி யோசித்துக் கொண்டே கிளம்புகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!