தடைகளை தாண்டி கடையை திறந்த குடும்பத்தினர், சாப்பாடு ஊட்டிவிட்ட மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தடைகளை தாண்டி கடையை திறந்த குடும்பத்தினர், சாப்பாடு ஊட்டிவிட்ட மூர்த்தி - இன்றைய
தடைகளை தாண்டி கடையை திறந்த குடும்பத்தினர், சாப்பாடு ஊட்டிவிட்ட மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தடைகளை தாண்டி கடையை திறந்த குடும்பத்தினர், சாப்பாடு ஊட்டிவிட்ட மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தை கடையை திறக்க அதிகாரி சொன்னதை நினைத்து சீல் தடுப்பு எல்லாம் எடுக்கப்படுகிறது. இந்த புது தொடக்கத்தை நினைத்து குடும்பமே சந்தோசப்படுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அதிகாரிகள் கடையை திறக்க அனுமதி வழங்கி இருக்கின்றனர். அப்போது கதிர் தனக்கு நடந்ததை நினைத்து பார்க்கிறார். கண்ணனை அடித்தவனை சந்திக்க போக அவன் இவர்கள் அடிக்க வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கண்ணனை அடித்தவனிடம் எனக்கும் உனக்கும் சண்டை என்றால் என்னை அடி ஆனால் என் குடும்பத்தை எதுவும் செய்யாதே என சொல்கிறார் என் அண்ணி 6 மாத குழந்தை உடன் அங்கே கொட்டும் பனியில் அமர்ந்து இருக்கிறார் என சொல்கிறார். அவன் மனம் இறங்கி தான் பேசி இருக்கிறார்.

அப்பா வருகையை நினைத்து கனவுடன் இருக்கும் லட்சுமி, உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

பின் கடையை திறக்க குடும்பத்துடன் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அலுவலர் வர நேரமாக எல்லாரும் கிளம்புகள் பனி இருக்கும் இடத்தில் குழந்தையுடன் இருக்க வேண்டாம் என ஜீவா கதிர் சொல்ல கடை திறக்கும் வரை நாங்களும் இருப்போம் என தனம் முல்லை சொல்கிறார். பின் அந்த அலுவலர் வந்து கடையை திறந்துவிடுகிறார். அதை பார்த்து குடும்பமே சந்தோஷத்தில் இருக்கின்றனர். கதிர் ஜீவா கடையை திறக்க, குடும்பத்தினர் கடைக்குள் சென்று பார்த்து சந்தோசப்படுகின்றனர். மூர்த்தி நம்ம குடும்பத்திற்கு எந்த கஷ்டமும் வராது என சொல்ல, மூர்த்தி எல்லாத்தையும் ஜீவாவும் கதிரும் சேர்ந்து கஷ்டப்பட்டிருப்பதாக சொல்ல, முல்லை அழ தொடங்குகிறார்.

கடையில் எந்த பக்கம் வைக்க வேண்டும் என பேசி சந்தோசப்பட, சரக்கு லாரி ஓட்டுநர் ஓனர் அளித்துள்ளதாக சொல்கிறார். நம்ம கடையில் பொருள்களை இறக்கிவிடலாம் என சொல்ல, நினைத்ததை சாதித்துவிடீர்கள் என அந்த ட்ரைவர் சொல்கிறார். பின் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் கதிர் ஜீவா இருக்கிறார்கள். பின் முல்லையின் அப்பா வந்திருக்க எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என நினைத்து சந்தோசப்படுகிறார். பின் தனம் சாப்பிட கூப்பிட மூர்த்தி நானே என் கையால் ஊட்டிவிட போகிறேன் என சொல்கிறார்.

முன்னாள் மனைவி சமந்தாவை கலாய்த்த நாகசைதன்யா – ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்?

அனைவரும் வரிசையாக அமர ஒரு பாத்திரத்தில் போட்டு நான் ஊட்டிவிட போகிறேன் என மூர்த்தி சொல்கிறார். பின் முல்லை அப்பா பாட சொல்ல மூர்த்தி சந்தோஷத்தில் பாடுகிறார். பின் மூர்த்தி கதிர் ஜீவாவிற்கு ஊட்டி விடுகிறார். கண்ணன் எங்கே என மூர்த்தி கேட்க, கண்ணனை கூப்பிடுகிறார். கண்ணன் வேகமாக வர, அவனையும் அழைத்து ஊட்டிவிடுகிறார். கண்ணன் அண்ணன் பாசத்தை பார்த்து மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here