‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் வெற்றி கொண்டாட்டம் – ரேட்டிங்கில் முதலிடம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் வெற்றி கொண்டாட்டம் - ரேட்டிங்கில் முதலிடம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் வெற்றி கொண்டாட்டம் - ரேட்டிங்கில் முதலிடம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் வெற்றி கொண்டாட்டம் – ரேட்டிங்கில் முதலிடம்!

விஜய் டிவியின் பிரபல தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடந்த வாரத்தில் ஒளிபரப்பப்பட்டு எபிசோடுகளுடன் 12.4 ரேட்டிங் பெற்று தமிழ் சின்னத்திரை தொடர்களில் முதன்மை வகித்துள்ள வெற்றியை நடிகர், நடிகைகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரை தொடர்களில் பெருமளவு ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் என்றால் அது விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடராகும். இந்த தொடரானது கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தாலும், அதற்கான ரசிகர்கள் இன்று வரை சற்றும் குறைந்ததில்லை. குறிப்பாக சீரியலின் ஒவ்வொரு ஜோடிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது தவிர இந்த தொடரின் கதாபாத்திரங்கள் அத்தனையும் நடிகர்களுடன் அப்படியே பொருந்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நயன்தாரா நடிப்பில் “நெற்றிக்கண்” திரைப்படம் – இன்று ஒடிடியில் வெளியீடு!!

மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின், தனம் கதாபாத்திரத்தில் வரும் சுஜிதா, கதிராக குமரன், ஜீவாவாக வெங்கட், மீனவாக ஹேமா, முல்லையாக காவ்யா என அத்தனை கதாபாத்திரங்களும் இந்த கதைக்கு வலுசேர்த்து வருகிறது. ஒரு வீட்டில் நான்கு தூண்களை வைத்து படப்பிடிப்பு நடத்திய இந்த சீரியல் தற்போது புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது தமிழ் சின்னத்திரை தொடர்களில் அதிகளவு ரேட்டிங் பெற்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் இந்த சீரியலின் ரேட்டிங்கை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் மூலம் மக்கள் அதிகம் பார்த்த தொடர்களில் ஒன்றாக, 12.4 ரேட்டிங் அளவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. சின்னத்திரை ரேட்டிங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு அடுத்ததாக விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ இடம்பெற்றுள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரத்தில் 12.3 ரேட்டிங் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!