நயன்தாரா நடிப்பில் “நெற்றிக்கண்” திரைப்படம் – இன்று ஒடிடியில் வெளியீடு!!

0
நயன்தாரா நடிப்பில்
நயன்தாரா நடிப்பில் "நெற்றிக்கண்" திரைப்படம் - இன்று ஒடிடியில் வெளியீடு!!
நயன்தாரா நடிப்பில் “நெற்றிக்கண்” திரைப்படம் – இன்று ஒடிடியில் வெளியீடு!!

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் Disney + Hotstar-ல் இன்று நண்பகல் 12.15 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில் திரில்லர் படமாக காட்டப்படுவதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

நெற்றிக்கண் திரைப்படம்:

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

மஹாவிற்கு சீமந்தம் வைக்க ஆசைப்படும் நாச்சியார், கொந்தளிக்கும் வடிவு – இன்றைய எபிசோட்!!

கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தை நேரடி ஓடிடி வெளியீடு செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த படத்தின் முதற்கட்ட ட்ரைலர் ஜூலை 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதற்கட்ட ட்ரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இந்த படம் எப்போது வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

TN Job “FB  Group” Join Now

விக்னேஷ் சிவன் படத்திற்கு தனி ரசிகர்கள் உள்ள நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தை எதிர்பார்த்து உள்ளனர். இந்த படம் இன்று (ஆகஸ்ட் 13) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் உதய நிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படம் போன்று இருப்பதாக சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!