ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் வைக்க அனுமதி கொடுத்த தனம், ஹோட்டலில் கூட்டம் இல்லாமல் கஷ்டப்படும் முல்லை கதிர் – இன்றைய எபிசோட்!

0
ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் வைக்க அனுமதி கொடுத்த தனம், ஹோட்டலில் கூட்டம் இல்லாமல் கஷ்டப்படும் முல்லை கதிர் - இன்றைய எபிசோட்!
ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் வைக்க அனுமதி கொடுத்த தனம், ஹோட்டலில் கூட்டம் இல்லாமல் கஷ்டப்படும் முல்லை கதிர் - இன்றைய எபிசோட்!
ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் வைக்க அனுமதி கொடுத்த தனம், ஹோட்டலில் கூட்டம் இல்லாமல் கஷ்டப்படும் முல்லை கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் ஐஸ்வர்யாவிடம் பியூட்டி பார்லர் பற்றி கேட்க ஆமாம் என ஐஸ்வர்யா விவரத்தை சொல்கிறார். பின் ஐஸ்வர்யா வீட்டில் பார்லர் வைக்க திட்டமிடுகிறார். மறுபக்கம் கதிர் முல்லை கடைக்கு கஸ்டமர் வராமல் இருப்பதால் மல்லி அவர்களை வெறுப்பேத்துவது போல பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் ஐஸ்வர்யாவிடம் நீ எதோ பியூட்டிசன் கோர்ஸ் படித்து இருக்கிறாயாம் என கேட்க ஆமாம் அக்கா என ஐஸ்வர்யா சொல்கிறார். இதை ஏன் நீ என்னிடம் சொல்லவில்லை என கேட்க, அப்போது ஐஸ்வர்யா நானே மறந்துவிட்டேன் என சொல்கிறார்.பின் உங்களுக்கு எப்படி தெரியும் என மீனா கேட்க, கஸ்தூரி அண்ணி நேற்று கடைக்கு வந்ததாக தனம் சொல்கிறார். பின் ஐஸ்வர்யா என் தோழி கல்யாணம் முடிந்து வெளி ஊருக்கு போவதால் அவருடைய பார்லர் பொருள்களை கொடுப்பதாக சொன்னதாக சொல்கிறார்.

உடனே மீனா இப்போது தான் கண்ணன் வேலைக்கு பணம் கொடுத்து இருக்கிறார்கள் மீண்டும் உனக்கு பார்லர் வைக்க பணம் கொடுக்க முடியாது என மீனா சொல்ல, அவள் இலவசமாக தான் பொருள்களை கொடுக்கிறாள். வீட்டில் எதாவது இடம் இருந்தால் சரியாக வரும் என ஐஸ்வர்யா சொல்கிறார். அதெல்லாம் சரியாக வராது என மீனா சொல்ல பார்க்கலாம் என தனம் சொல்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா வீட்டில் நின்று இந்த இடத்தில் பார்லர் வைத்தால் சரியாக இருக்குமா என பார்த்துக் கொண்டிருக்க மீனா அதை எல்லாம் குறை சொல்லி தடுத்துவிடுகிறார்.

பின் ஜீவா வர ஐஸ்வர்யா இந்த இடத்தில் பார்லர் வைத்தால் சரியாக வரும் என சொல்கிறார். பின் ஜீவாவிடம் விவரத்தை சொல்ல ஆமாம் கஸ்தூரி அக்காவும் சொன்னதாக சொல்கிறார். கத்துக் கொண்ட விஷயத்தை தாராளமாக செய் நான் உனக்கு என்ன உதவி தேவையோ அதை செய்கிறேன் என ஜீவா சொல்கிறார். உடனே மீனா ஜீவாவை முறைக்கிறார். மீனா வீட்டில் பார்லர் வைத்தால் எப்படி சரியாக வரும் என கேட்க ஜீவா உடனே வைக்க போவதில்லை என சொல்கிறார். பொருள் எல்லாம் செட் ஆக வேண்டும் என ஜீவா சொல்ல, அக்கா வீட்டில் வைக்கலாம் என சொன்னதாக சொல்கிறார். மீனா அப்படியெல்லாம் சொல்லவில்லை என சொல்ல , ஐஸ்வர்யா அக்கா கண்டிப்பாக செய்யலாம் என சொன்னதாக சொல்கிறார்

பின் மீனா நீ அவளுக்கு சப்போர்ட் செய்ய போறியா, நான் கூட டிகிரி முடித்துவிட்டு இந்த வீட்டில் வேலைகளை செய்கிறேன். நானும் நிறைய கத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் சப்போர்ட் செய் நானும் வேலை செய்கிறேன் என சொல்ல ஜீவா மீனாவை கிண்டல் செய்கிறார். மறுபக்கம் முல்லை கதிர் கடையில் வேலைகளை செய்ய சாப்பாடு எல்லாம் அப்படியே இருப்பதாக முல்லை வருத்தப்படுகிறார். கடை இப்போது தான் திறந்து இருக்கிறோம் கண்டிப்பாக வருவார்கள் என சொல்ல, முருகன் கடைக்கு ஆள் வருகிறார்களா என வாசலில் நின்று பார்க்கிறார். கதிர் அவரை உள்ளே வர சொல்கிறார்.

ராதிகாவை சந்திக்க சென்ற கோபி, பார்த்துவிட்ட ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதன் பின் முல்லையின் அம்மாவும் மல்லியும் வருகிறார்கள். முல்லை அம்மா வந்து பார்க்க ஹோட்டலில் யாரும் இல்லை. பின் மல்லி கடைவீதியில் எல்லா கடையிலும் ஆளுங்க இருக்காங்க ஆனால் இங்கே யாருமில்லை என மல்லி சொல்கிறார். பின் முல்லை அம்மா சாப்பாடுகளை திறந்து பார்க்க எல்லாம் அப்படியே இருக்கிறது. உடனே கொஞ்சமாக செய்ய சொன்னால் கேட்கவில்லை என சொல்கிறார். பின் ஒருவர் வந்து இடியப்பம் கேட்க இல்லை என கதிர் சொல்கிறார். பின் மல்லி நாளைக்கு நிறைய இடியப்பம் போட்டு அடுக்கி வைங்க என சொல்ல, முல்லை உனக்கு மதுரையில் வேலை இல்லையா என கேட்க நீங்க உருப்படாமல் போவதை பார்த்துவிட்டு தான் போவேன் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!