ராதிகாவை சந்திக்க சென்ற கோபி, பார்த்துவிட்ட ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவை சந்திக்க சென்ற கோபி, பார்த்துவிட்ட ராமமூர்த்தி - இன்றைய
ராதிகாவை சந்திக்க சென்ற கோபி, பார்த்துவிட்ட ராமமூர்த்தி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவை சந்திக்க சென்ற கோபி, பார்த்துவிட்ட ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி உனக்காக தான் எல்லாம் செய்தேன் இப்போது இந்த நிலைமையில் இருப்பதாக ராதிகாவிடம் சொல்கிறார். சீக்கரம் நல்ல முடிவை எடுக்க வேண்டும் சொல்கிறார். பின் அவர் ராதிகா வீட்டில் இருந்து வெளியே வருவதை ராமமூர்த்தி பார்த்துவிடுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா வீட்டிற்கு வந்து இத்தனை வருஷம் எந்த குடும்பத்திற்காக உழைத்தேனோ அந்த குடும்பம் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிருச்சு. நான் உனக்காக தான் விவாகரத்து வாங்கினேன் என சொல்ல, யாரிடம் இருந்து விவாகரத்து வாங்குனீங்க என என்னிடம் சொல்லவில்லை என சொல்கிறார். பின் கோபி சரி நடந்ததை எல்லாம் விடு, நான் உன் மீது வைத்திருந்த அன்பு உண்மை என சொல்கிறார். பின் ராதிகா உங்க நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆனால் நீங்க என்னிடம் உண்மையாக இல்லை உங்க மனைவி பற்றி முன்னாடியே உண்மை சொல்லி இருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருப்பேன் என சொல்கிறார்.

உன்னை என்னிடம் காட்டிய அந்த சக்தி தான் இந்த நிலைமையில் என்னை வைத்துள்ளது. உன்னுடன் வாழ வேண்டும் என்ற ஆசையால் இப்போது அனாதையாக இருக்கேன் நீயும் என்னை கை விட்டால் அவ்வளவு தான் என கோபி சொல்கிறார். பின் உன் இஷ்டம் என கோபி சொல்லிவிட்டு கிளம்புகிறார். அவர் வெளியே வந்து நிற்க ராமமூர்த்தி அந்த பக்கம் வருகிறார். கோபி அங்கே சண்டை போட்டு நேராக இங்கே வந்து இருப்பதாக நினைத்து கோபப்படுகிறார். பின் ராதிகா வீட்டிற்குள் வந்து ராதிகாவிடம் சத்தம் போடுகிறார்.

ராதிகாவிடம் நான் உன்னை என்னமோ நினைத்தேன் நீ என் பையனால் பாதிக்கப்பட்டு இருக்கிறாய் என நினைத்தேன். பாக்கியா போலவே நீயும் ஏமாந்து நிற்கிறாய் என நினைத்தேன் ஆனால் இங்கே வந்து நிற்கும் போது தான் தெரிகிறது உன் லட்சணம் என்ன என கேட்கிறார். பின் ராதிகா அப்பா இப்படி பேசாதீங்க நானே நொந்து போய் இருப்பதாக சொல்ல நாங்களும் நொந்து போய் தான் இருக்கோம் அதை எல்லாம் சரி செய்யலாம் என நினைத்து உனக்கு ஆறுதல் சொல்லலாம் என வந்தால் அந்த கோபி இங்கே வந்து நிற்கிறான் என சொல்ல, ராதிகா நீங்க எதையாவது கற்பனை செய்யாதீங்க என சொல்கிறார்.

பின் தாத்தா எது கற்பனை அங்கே சண்டை போட்டு நேராக இங்கே வந்திருந்தால் என்ன அர்த்தம் என் கேட்கிறார். பின் சந்துரு தேவை இல்லாமல் பேசாதீங்க உங்களுக்கு இங்கே வந்து பேச எந்த உரிமையும் இல்லை என சொல்ல. ஆமாம் உரிமை இல்லை ஆனால் பிரச்சனை என தெரிந்தால் விலகிவிட வேண்டும் ஆனால் மேலும் மேலும் பிரச்சனை கொடுக்க கூடாது என சொல்கிறார். உன் தங்கச்சி பல முறை எங்க வீட்டிற்கு வந்திருக்கிறாள் என் மருமகள் அவளை பாசமாக கவனித்து இருப்பதாக சொல்ல, ஒரு பெண்ணாக பொறுப்பு வேண்டாமா என கேட்கிறார். உடனே சந்துரு என் தங்கச்சி குடும்பத்தை கெடுத்ததாக சொல்லாதீங்க எல்லாத்துக்கும் காரணம் கோபி தான் என சொல்கிறார்.

உங்க பையன் தான் இவளை தேடி வந்தான் நாங்க உங்க வீட்டிற்கு வந்து கத்தடுமா என கேட்கிறார். உங்களை போலவே எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. எதுனாலும் உங்க பையனிடம் பேசுங்க வயதில் பெரியவர் என பார்க்கிறேன் என சொல்ல, கோபி சண்டை போட்டால் அவரிடம் சத்தம் போடுங்கள் இங்கே வந்து பேசாதீங்க என சொல்ல, ராமமூர்த்தி வருத்தப்பட்டு பேசுகிறார். பின் ராமமூர்த்தி கிளம்பிவிட ராதிகா வயதானவரிடம் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய் என கேட்கிறார். அப்போது சந்துரு அவர் இஷ்டத்துக்கு பேசுவாரா கோபி சொன்னது உண்மை தான் போல நம்மளிடம் இப்படி பேசினால் கோபியை எப்படி எல்லாம் கொடுமை செய்வார்கள். கோபி பாவம் என சொல்கிறார்.

மறுபக்கம் தாத்தா சந்துரு பேசியதை நினைத்து பார்க்கிறார். பின் பாக்கியா அனைவருக்கும் சாப்பாடு வைக்க ஆனால் யாரும் சாப்பிடாமல் இருக்கிறார். பாக்கியா சாப்பாடு வைக்கவா என கேட்க ஆனால் தாத்தா பேசாமல் இருக்கிறார். அப்பறமா சாப்பிடுகிறேன் என சொல்கிறார். இனியா ஈஸ்வரி செழியன் என அனைவரும் சாப்பிடாமல் கிளம்பிவிட தாத்தா விடுமா எத்தனை நாள் சாப்பிடாமல் இருக்க முடியும் நீ சாப்பிட்டு எடுத்து வை என சொல்கிறார். ஜெனி ஆமாம் ஆன்டி என சொல்ல, பாக்கியா நீங்களும் சாப்பிடாமல் இருக்கீங்களே என கேட்கிறார். தாத்தா எனக்கு வயிறு சரி இல்லை என சொல்கிறார். பாக்கியா எல்லாத்தையும் நினைத்து வருத்தப்பட எழில் பால் கொண்டு வந்து கொடுக்கிறார்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 % உயர்வு – சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு!

ஏன் அம்மா ஒரு மாதிரி இருக்கிறாய் என எழில் கேட்கிறார். பாக்கியா ஒன்றுமில்லை என சொல்ல, எத்தனை நாள் நீ தனியாக அழுது இருப்பாய். இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு நாள் வரும் என நீ நினைத்திருக்க மாட்டாய் என எழில் கேட்கிறார். நீ அழுதது எல்லாம் யாருக்கும் தெரியாமல் இருக்கும் ஆனால் இப்போது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. இத்தனை நாள் உன் மனதில் இருந்த பாரம் இப்போது இறங்கிவிட்டாலும் உன் மனதில் அந்த பாரம் இருந்த காயம் இருக்கும் என சொல்ல, நல்லவேளை என்னுடன் நீ இருந்தாய் என பாக்கியா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!