ஐஸ்வர்யாவை துரத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம், இரண்டாக உடையுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
ஐஸ்வர்யாவை துரத்தும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம், இரண்டாக உடையுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஐஸ்வர்யாவை துரத்தும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம், இரண்டாக உடையுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஐஸ்வர்யாவை துரத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம், இரண்டாக உடையுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இறந்து போன லட்சுமி அம்மாவை பார்க்க வரும் ஐஸ்வர்யாவை, பார்வதி அடித்து கீழே தள்ளிவிடுகிறார். அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தற்போது ஏற்பட்ட விரிசல் இன்னும் பெரிதாகும் என கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஒரு இறப்பு வீடு எப்படி இருக்குமோ அதே போல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் லட்சுமி அம்மாவின் இறப்பு மற்றும் இறுதி சடங்குகள் காணப்படுகிறது. கதைக்கு தான் லட்சுமி அம்மா இறந்தார்கள் என்பதை மறந்து ரசிகர்களையும் அழவைக்கும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு அவ்வளவு கனமாக இருக்கிறது. சீரியலில் இறந்து போன லட்சுமி அம்மாவை சுற்றி அமர்ந்து கொண்டு அனைவரும் அழுது கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தனம், மூர்த்தி, கதிர் உட்பட அனைவரும் தங்களுடைய வீட்டில் நிஜமான இறப்பு நிகழ்ந்தவாறு தத்ரூபமாக நடித்து வருகின்றனர்.

ரோஜாவை பிடிக்கும் செண்பகம், தன்னுடைய மகள் தான் என சொல்வாரா? வெளியான ப்ரோமோ!

இதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் போலும். இப்படி சோகமும், துக்கமுமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், இறந்து போன லட்சுமி அம்மாவை பார்க்க அவரது தம்பி மூர்த்தி மற்றும் பார்வதி இருவரும் வருகின்றனர். வழக்கம் போல குடும்பத்தினருடன் சேர்ந்து இருவரும் கதறி அழ லட்சுமி இறப்புக்கு கண்ணன் தான் காரணம் என பார்வதி கூறுகிறார். இதை கேட்கும் மூர்த்திக்கும் அதே எண்ணம் தான் தோன்றுவது போல அவரது முகம் லேசாக மாறுகிறது. பின்னர் ஜனார்த்தனனுக்கு தகவல் கிடைத்ததும் அவரும் மூர்த்தி வீட்டுக்கு வருகிறார்.

இப்போது மீனா அவரது அம்மா மற்றும் அப்பாவை கட்டிக்கொண்டு அழுகிறார். தொடர்ந்து எல்லாரும் லட்சுமி அம்மாவை சுற்றி நின்று அழுது கொண்டிப்பதை பார்க்கும் ஜனார்த்தனன், ஆக வேண்டிய மற்ற காரியங்களை பார்க்க வேண்டும் என கூறுகிறார். லட்சுமி இறந்ததை அறிந்த ஐஸ்வர்யா கடையில் இருந்து வீட்டுக்கு வருகிறார். கண்ணனுக்கு நடந்ததை தெரிவிக்க அவரிடம் போன் இல்லையென்று வருந்திக்கொண்டே இருக்கும் அவர் திடீரென மயக்கமடைகிறார்.

பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா, காப்பாற்றுவாரா சரவணன் – பரபரப்பான இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

பின்னர் ஒரு வழியாக எழுந்து லட்சுமி வீட்டுக்கு வரும் ஐஸ்வர்யாவுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. மூர்த்தி வீட்டு வாசலில் வந்து நிற்கும் ஐஸ்வர்யாவை, வீட்டுக்குள் செல்லவிடாமல் பார்வதி தடுக்கிறார். ஐஸ்வர்யா பயந்ததை போலவே, உன்னால் தான் லட்சுமி இறந்தார் என சொல்லி பார்வதி அவரை அவமானப்படுத்துகிறார். அத்தையை ஒருமுறை பார்க்க வேண்டும் என சொல்லி ஐஸ்வர்யா கெஞ்ச பார்வதி அவரை கீழே தள்ளிவிடுகிறார். அதனால் ஐஸ்வர்யா வீட்டுக்குள் செல்லாமல் வெளியே ஒரு ஓரமாக நின்று அழுது கொண்டிருக்கிறார்.

எப்படியானாலும் ஐஸ்வர்யாவை வீட்டுக்குள் வர பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனுமதிக்காது. இப்போது அம்மா இறந்தது தெரியாமல் திருச்சியில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும் கண்ணன், அம்மா முகத்தை கடைசியாக பார்ப்பார் என்பதே சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் லட்சுமியின் மறைவுக்கு பிறகு கண்டிப்பாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை மூர்த்தி குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வது போல் தெரியவில்லை. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் விரைவில் இரண்டாக பிரியும் என ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!