விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் சாப்பாடு வகைகளை வாங்கி சாப்பிட்டு அது எப்படி இருக்கிறது என சொல்வது பற்றிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் வெற்றி கண்ட சீரியல் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தமிழ் சின்னத்திரையில் நல்ல ஒரு குடும்ப சீரியலாக இருக்கிறது,. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நடுத்தரக் வர்க்கத்தின் வாழ்க்கை முறையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. இந்த சீரியலில் மூர்த்தி, தனம், ஜீவா, மீனா, முல்லை, கதிர், கண்ணன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்
ஆலியாவிற்கு மிக பிரம்மாண்டமாக வளைகாப்பை நடத்திய சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா சதீஸ் நடித்து வருகிறார். அவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு தனி மரியாதையை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் கொடுத்தது. அவர் சீரியலை தவிர்த்து யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏகப்பட்ட வீடியோக்களை அவர் பதிவிடுவார். கர்ப்பகால குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, ஷாப்பிங் வீடியோக்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் படப் பிடிப்பு தலத்தில் இருந்து ஏகப்பட்ட வீடியோக்களை அவர் பதிவிடுவார்.
தற்போது அவர் சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில் உணவுகளை வாங்கி அதை சாப்பிட்டு பார்த்து விளக்கமும் அளிப்பார். அந்த வகையில் அசைவ சாப்பாட்டில் தான் அதிக வகை இருக்கும் என கேள்விபட்டிருப்போம். ஆனால் தற்போது சைவத்தில் கூட அதிக வகை இருக்கிறது என அந்த வீடியோவில் அவர் காட்டி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. சைவத்தில் 25 வகை சாப்பாடை சாப்பிட்டு பார்த்து நேர்மையாக அவர் விளக்கம் அளித்து இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.