விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் – சூரத் விசிட்! வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் - சூரத் விசிட்! வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் - சூரத் விசிட்! வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் – சூரத் விசிட்! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமா தற்போது சூரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அங்குள்ள ஜவுளி கடை ஒன்றில் உள்ள ட்ரெஸ் கலெக்ஷன்களை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

நடிகை ஹேமா

தமிழ் சின்னத்திரை தொடர்களில் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் வெளியாகி வரும் இந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் ஒரு கூட்டு குடும்பத்தில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகள் மற்றும் சிறிய சிறிய பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமான முல்லை – மகிழ்ச்சியில் கதிர்! அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பொதுவாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் எல்லா கதாப்பாத்திரங்களும் பாசிட்டிவ் ஆகவே காட்டப்பட்டு வருவதால் பெரிய பிரச்சனைகள் என்று எதுவும் எழுந்ததில்லை. என்றாலும் குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சில குழப்பங்களுக்கு காரணமாக காட்டப்படுவது மீனா கதாப்பாத்திரம் தான். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக, நகைச்சுவை கலந்த வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.

ஒரு தாயின் உயிரை காப்பாற்றிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி – கண்கலங்கிய புகழ் & சிவாங்கி!

நடிப்பதை தவிர சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்து வரும் நடிகை ஹேமா தனது பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட், ட்ராவல் வ்லாக், மேக் அப், ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ஹேமா. அந்த வகையில் தற்போது சூரத்திற்கு பயணம் செய்துள்ள ஹேமா அங்குள்ள பிரபலமான ஹோல்சேல் ஷாப்பிங் கடைக்கு சென்று புடவை கலெக்ஷன்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!