‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ ஜீவாவை கலாய்த்த ரசிகர்கள் – காரணம் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு!

0
'பாண்டியன் ஸ்டார்ஸ்' ஜீவாவை கலாய்த்த ரசிகர்கள் - காரணம் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு!
'பாண்டியன் ஸ்டார்ஸ்' ஜீவாவை கலாய்த்த ரசிகர்கள் - காரணம் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு!
‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ ஜீவாவை கலாய்த்த ரசிகர்கள் – காரணம் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் வெங்கட் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் ரசிகர்கள் கமெண்ட்கள் மூலமாக கலாய்த்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

சின்னத்திரையை பொருத்த மட்டிலும் பல சீரியல்களும் அதன்மூலம் பல நட்சத்திரங்களும் வந்த மயமாக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளங்களும் தொடர்ந்து அவரகளது ஆதரவையும், அன்பையும் கொடுத்து வருகின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு ரசிகர்கள் அவர்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்களோ அதே அளவுக்கு நெட்டிசன்கள் வளர்ந்துவரும் நட்சத்திரங்களை விமர்சனம் செய்வதில் தவறுவதில்லை.

ராதிகா, கோபி பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ப்ரோமோ!

அவ்விதமாக விஜய் தொலைக்காட்சியில் டாப்மோஸ்ட் சீரியலில் ஒன்றாகவும், பல எபிசோடுகளை கடந்தும் ஹிட் கொடுத்து வரும் தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அதில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு தனிப்பட்ட முறையிலும் கதைக்களத்தை பொருத்தும் ரசிகர்கள் குவிந்துள்ளார்கள். அதில் நான்கு அண்ணன் தம்பிகளில் ஒருவரான ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட்டும் பிரபலமான சின்னத்திரை நடிகராக உள்ளார். அவர் சமீபத்தில் தனது 11வது திருமண நாளை அவரது மனைவி மற்றும் மகளுடன் கோலாகலமாக கொண்டாட விரும்பி மாலத்தீவு சென்றுள்ளார்.

Exams Daily Mobile App Download

அங்கே அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ஒருபுறம் லைக்ஸ் குவிந்து வந்தாலும், நக்கலுக்கு பேர்பெற்ற நெட்டிசன்கள் அந்த போட்டோவுக்கும் சீரியலுக்கும் லிங்க் ஏற்படுத்தி ‘அங்க மூர்த்தி அண்ணன் நெஞ்சுவலில போராடிட்டு இருக்காரு. நீ ஊரு சுத்திட்டு இருக்கியா?’ என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர். இவ்வாறு வெங்கட் வெளியிட்ட போட்டோக்களை விடவும் நெட்டிசன்களின் கமெண்டுகள் தான் அதிகளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!