மூர்த்தியை விட அதிகம் சம்பளம் வாங்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ஷாக் ரிப்போர்ட்!

0
மூர்த்தியை விட அதிகம் சம்பளம் வாங்கும்
மூர்த்தியை விட அதிகம் சம்பளம் வாங்கும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம் - ஷாக் ரிப்போர்ட்!
மூர்த்தியை விட அதிகம் சம்பளம் வாங்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ஷாக் ரிப்போர்ட்!

தமிழில் சிறந்த குடும்ப சீரியல் என்ற வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இடம் பெற்றுள்ளது. இந்த சீரியலில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில் அவர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல ஒரு குடும்ப சீரியலாக இருக்கிறது. இதில் அண்ணன், தம்பிகள் என நான்கு பேரும் சேர்ந்து தனது அப்பா பெயரில் ஒரு மளிகை கடை நடத்தி வருகின்றனர். அவர்களது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், சுப காரியங்கள், சோகம் ஆகியவை வைத்தே இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் மூத்த அண்ணனாக ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார்.

தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய “அறந்தாங்கி நிஷா” – வைரலாகும் வீடியோ!

அவர் கலைஞர் டிவியில் பாரதிராஜா இயக்கத்தில் ஒளிபரப்பான ‘தெக்கத்தி பொண்ணு’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். மேலும் அவருக்கு ஜோடியாக குழந்தை நட்சத்திரமாக பிரபலமான சுஜிதா நடித்து வருகிறார். அவரும் முன்னணி நடிகர்களின் ஒருவராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா, சரவண விக்ரம், சாய் காயத்ரி ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அவர்கள் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரமான மூர்த்தியை விட தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா அதிகம் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here