தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய “அறந்தாங்கி நிஷா” – வைரலாகும் வீடியோ!

0
தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய
தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய "அறந்தாங்கி நிஷா" - வைரலாகும் வீடியோ!
தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய “அறந்தாங்கி நிஷா” – வைரலாகும் வீடியோ!

தமிழக மக்களால் ஜாதி, மதம் அனைத்தையும் மறந்து கொண்டாப்படும் பண்டிகை பொங்கல். இந்த வருடமும் பிரபலங்கள் பலர் தங்களது வீட்டில் பொங்கல் கொண்டாடிய நிலையில் அறந்தாங்கி நிஷா தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சென்ற வாரம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை மதங்களை கடந்து அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் பொங்கல் கொண்டாடப்படும். முதல் நாள் போகி அன்று வீட்டில் இருக்கும் பழைய பொருள்களை எல்லாம் எரிப்பார்கள். இரண்டாம் நாள் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை அன்று வீட்டில் அனைவரும் புது உடை போட்டு பொங்கல் வைப்பார்கள். மூன்றாம் நாள் மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்கும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் குளறுபடி செய்யும் ஐஸ்வர்யா, ஒற்றுமை குழையுமா? பதட்டத்தில் ரசிகர்கள்!

நான்காம் நாள் காணும் பொங்கல் அன்று சில சுற்றுலா தலங்களில் மக்கள் குடும்பத்துடன் சென்று மகிழ்வார்கள். இந்நிலையில் பல சினிமா நட்சத்திரங்கள் தங்களது வீட்டில் பொங்கல் வைத்து அது குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் ஷேர் செய்தனர். அந்த வகையில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் நகைச்சுவை நடிகையாக இடம் பிடித்து தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் களமிறங்கி இருக்கும் அறந்தாங்கி நிஷா தங்களது வீட்டில் பொங்கல் கொண்டாடி இருக்கிறார்.

“அபி டெய்லர்” சீரியலில் ஒன்று சேர்ந்த விஜய் டிவி வில்லிகள் – வெண்பா வெளியிட்ட வீடியோ!

அவர் முஸ்லீமாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகை என்ற நோக்கத்தில் தனது கணவர் குழந்தைகள் மற்றும் தம்பி அவரது மனைவி உடன் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து இருக்கிறார். அப்போது கூட தனது கணவரை டேமேஜ் செய்வது போல கலாய்த்து இருக்கிறார். மேலும் அவருக்கு தற்போது மகள் பிறந்துள்ள நிலையில் தனது மகளின் முதல் பொங்கல் பண்டிகை என அதில் சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here