‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட உருக்கமான வீடியோ – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட உருக்கமான வீடியோ - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட உருக்கமான வீடியோ - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட உருக்கமான வீடியோ – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து சில விஷயங்களை செய்ததாக கூறி வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சரவணன்

கிட்டத்தட்ட 750 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கும் விஜய் டிவியின் ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. கூட்டு குடும்ப வாழ்க்கையை, அண்ணன், தம்பிகளின் ஒற்றுமையை ரசிகர்களிடம் எடுத்துரைக்கும் ஒரு சிறப்பான பணியை செய்து வரும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை பொருத்தளவு, இதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் அனைவரும் சின்னத்திரையில் ஏற்கனவே பரீட்சயமான முகங்கள் தான்.

தமிழகத்தில் டிச.4ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – எந்த மாவட்டத்தில் தெரியுமா?

ஆனால் கடைக்குட்டி கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம் மட்டும் ரசிகர்களுக்கு புதிய அறிமுகம். என்றாலும் தனது வெகுளித்தனமான நடிப்பால் எக்கச்சக்க ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நடிகர் சரவண விக்ரம் சமீபத்தில் இந்த சீரியலுக்காக மேற்கொண்ட ஒரு விஷயம் அனைவரையும் சற்று வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் லட்சுமி அம்மா கதாப்பாத்திரம் இறப்பதாக காட்டப்பட்ட காட்சிகளில், அம்மாவுக்காக கண்ணன் மொட்டை போடுவது போல சில சடங்குகள் நடைபெற்றிருந்தது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘பாக்கியலட்சுமி’ வரை – சீரியல் ப்ரோமோக்களின் டாப் கமெண்ட்ஸ்!

இந்த சடங்கின் போது நடிகர் சரவண விக்ரம் நிஜமாகவே மொட்டை போட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மொட்டையுடன் நடித்து வந்த நடிகர் சரவண விக்ரமிற்கு தற்போது முடி வளர்ந்திருக்கிறது போல. இந்நிலையில், ‘2 மாதங்கள் கழித்து தற்போது தான் இந்த விஷயத்தை செய்வதாக கூறி விட்டு, ஹேர் ட்ரையர் மற்றும் சீப்பை எடுத்து காட்டி இதை உபயோகித்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இப்போது தான் முடி வளர்ந்திருக்கிறது’ என சொல்வது போல ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!