ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முல்லை காவ்யா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் குடும்ப பெண்ணாக முல்லை கதாபாத்திரத்தில் கலக்கி வரும் நடிகை காவ்யா அறிவுமணி செம மாடலாக வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். நடுத்தரக் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை பற்றியும், ஒற்றுமையாக அதை தாண்டி வருவது பற்றியும் கதையில் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் கதிர் முல்லை ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். முதலில் முல்லையாக நடிகை விஜே சித்ரா நடித்து வந்தார்.

Exams Daily Mobile App Download

அவருடைய மறைவிற்கு பின்னால் முல்லையாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதன் பின் விஜே சித்ராவின் சாயலில் களமிறங்கிவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி. அவர் அப்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் விஜே சித்ராவின் நியாபகம் வராமல் அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் காவ்யாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஆர்யன் – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் அவர் சீரியலை விட்டு விலக இருப்பதாக செய்திகள் வைரலாகி வருகிறது. ஆனால் அது குறித்து அவரிடம் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் தொடர்ந்து அவர் முல்லையாக கலக்கி வருகிறார். குடும்ப பெண்ணாக அவரை எப்போதும் சேலையில் பார்த்த ரசிகர்கள் தற்போது தலையில் கலரிங் செய்து மாடல் லுக்கில் இருப்பது போல வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் காவ்யாவை பார்த்த ரசிகர்கள் நம்ம முல்லையா இது என வியந்து பார்க்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!