“வாழ வேண்டிய வயதில் வாடிய மலர் சித்ரா” பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் நினைவஞ்சலி!

0
"வாழ வேண்டிய வயதில் வாடிய மலர் சித்ரா" பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் நினைவஞ்சலி!
“வாழ வேண்டிய வயதில் வாடிய மலர் சித்ரா” பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் நினைவஞ்சலி!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே சித்ரா. அவருடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று என்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் தங்களது வருத்தம் கலந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா, காவ்யா, சரவண விக்ரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஒரு ஆண்டிற்கு முன்னதாக முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். கதிர் முல்லை காதல் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை சித்ரா குறித்து மனம் உருகிய வெங்கட், குமரன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இந்நிலையில் விஜே சித்ரா தனது கணவர் ஹேமந்த் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம் டிசம்பர் 09 ஆம் தேதி ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து இன்றுடன் ஓராண்டு முடிவடைந்துள்ளது. ஆனாலும் அவரது நினைவுகள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நாள் வராமலே இருந்தால் இன்னும் விஜே சித்ரா உயிருடன் இருந்திருப்பார் என ரசிகர்கள் தொடர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சித்ரா இல்லாததை நினைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா கண்ணீருடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் உன்னை நாங்க ரொம்ப மிஸ் பண்ணுகிறோம். நீ இல்லாமல் ஒரு வருடம் கடந்துவிட்டது. நீ அங்கே ரொம்ப சந்தோசமாக இருப்ப என நினைக்கிறன். நீ எதிர்பார்த்த அழகான வாழ்க்கையுடன் மறுபடியும் நீ இங்கே வர வேண்டும் என கடவுளை வேண்டிக்கிறேன் என ஹேமா பதிவிட்டுள்ளார்.

Vijay TV Bigg Boss 5 Promo | ப்ரியங்கா, தாமரைக்கு இடையில் பூதாகரமாக வெடித்த சண்டை! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

சித்ராவுடன் எடுத்துக் கொண்ட பல வீடியோக்களை ஹேமா தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா நீ என்னைக்குமே எங்க மனதில் தான் இருப்ப, என பதிவிட்டுள்ளார். அதே போல மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின், மரணம் வருவது இயற்கை தான், ஆனால் இயற்கையாய் வந்தால் ஏற்கலாம். நீ வாழ வேண்டிய வயதில் வாடிய மலராகி உதிர்ந்து போன உன்னை எப்படி மறப்பது என பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய நெருக்கமான நண்பர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!