“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அண்ணன்களுடன் சேர்ந்த கண்ணன் – வெளியான ப்ரோமோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஜீவா
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஜீவா "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அண்ணன்களுடன் சேர்ந்த கண்ணன் - வெளியான ப்ரோமோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஜீவா “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அண்ணன்களுடன் சேர்ந்த கண்ணன் – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் பணத்தை எடுக்கவில்லை என மீனா கண்டுபிடித்து சொல்ல, ஜீவாவும் கதிரும் கண்ணனை அழைத்து ஆதரவாக பேசுகின்றனர். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் கண்ணனை விரைவில் குடும்பத்தில் சேர்த்து கொள்வார்கள் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அப்பா கடையில் பணம் திருடு போக அவர் கண்ணன் மீது சந்தேகப்பட்டு வேலையை விட்டு அனுப்புகிறார். அப்போது கதிர் கட்டிட மேஸ்திரிக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுக்கிறார். அது மூர்த்திக்கு தெரியவர பணம் எங்கே என கேட்கிறார். பணம் காணாமல் போனதாக கதிர் சொல்ல, மூர்த்தி கதிர் மீது கோபப்படுகிறார். இதை எல்லாம் பார்த்து முல்லைக்கு கோவம் வருகிறது. முல்லை ஐஸ்வர்யா கண்ணனை திட்ட அதை கஸ்தூரியிடம் சொல்லி பணம் கேட்கின்றனர்.

‘உங்களால் தான் நான் மீண்டு வந்தேன்’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த கமல் – வெளியான மாஸ் ப்ரோமோ!

ஆனால் கஸ்தூரி அதை மூர்த்தி மற்றும் தனத்திடம் சொல்கிறார். ஆனாலும் மூர்த்தி கோவமாக இருக்க இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட மீனா கோவப்பட்டு அவர் அப்பா கடைக்கு சென்று சிசிடிவி காட்டி கண்ணன் திருடவில்லை என நிரூபிக்கிறார். மேலும் பணத்தை கொண்டு வந்து கதிரிடம் கொடுக்கிறார். அதை பார்த்து சந்தோசப்பட்ட கதிர் கண்ணனிடம் சொல்வோம் என ஜீவா மற்றும் கதிர் வாசலுக்கு வருகின்றனர். அப்போது கண்ணனை கூப்பிட எப்படி இருக்க என கேட்கிறார். நன்றாக இருக்கேன் என சொல்ல, இட்லி கடை எப்படிபோகிறது என கேட்கிறார். இப்போது தான் நன்றாக போகிறது என சொல்ல நீங்க இரண்டு பேரும் என்னை கூப்பிட்டு பேசியது ரொம்ப சந்தோசம் என சொல்கிறார்.

சின்னத்திரை சீரியல் ஜோடிகளின் கல்யாண சீசன் – ஸ்பெஷல் தருணங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

ஜீவா என் மாமா உன்னை ரொம்ப திட்டிட்டாரா என கேட்க, அவர் பேசியது எனக்கு புதுசு இல்லை என சொல்கிறார். மேலும் பணம் கிடைத்து விட்டது என சொல்ல இனிமேல் இப்படி யாராவது திட்டினால் கேட்காதே என சொல்கிறார். நீங்க அடிக்கடி என்னை அழைத்து இப்படி பேசினால் தைரியமாக இருப்பேன் என கண்ணன் அழுகிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களை கண்ணனை விரைவில் சேர்த்து கொள்வார்கள் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் சில நாட்களில் கயல் பாப்பா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கண்ணனை அழைப்பார்கள் என எதிர்பாத்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here