‘உங்களால் தான் நான் மீண்டு வந்தேன்’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த கமல் – வெளியான மாஸ் ப்ரோமோ!

0
'உங்களால் தான் நான் மீண்டு வந்தேன்' பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த கமல் - வெளியான மாஸ் ப்ரோமோ!
'உங்களால் தான் நான் மீண்டு வந்தேன்' பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த கமல் - வெளியான மாஸ் ப்ரோமோ!
‘உங்களால் தான் நான் மீண்டு வந்தேன்’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த கமல் – வெளியான மாஸ் ப்ரோமோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஒன்பது வாரம் முடிந்துள்ளது. கடந்த வாரம் கொரோனா தொற்று காரணமாக கமல்ஹாசன் கலந்து கொள்ளாத நிலையில், இன்றைய எபிசோடில் அவர் கலந்து கொள்ளும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடங்கப்பட்டு தற்போது 60 நாட்களை நெருங்கி உள்ளது. கடந்த 4 சீசன்களை போல இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த சீசன் தற்போது 8 வாரங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 8 வாரங்களில் 8 பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். கடந்த வாரம் 3 பேர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்துள்ளனர்.

சின்னத்திரை சீரியல் ஜோடிகளின் கல்யாண சீசன் – ஸ்பெஷல் தருணங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

மேலும் கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கமல் வரவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் அவர் கட்டாயம் வர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வினுஷாவிற்கு இன்று பிறந்தநாள் – குவியும் லைக்குகள்!

அதில் நடிகர் கமல் நடந்து வர பின்னால் ஓடும் இசையை சேர்ந்து கேட்டு ரசிகர்கள் மெய்சிலிர்த்து இருந்தனர். மேலும் உங்களால் தான் நான் மீண்டும் எழுந்து வந்தேன். இந்த சீசனில் ஒன்று தெரிகிறது. அனைவரும் தனித்தனியாக அவர்களது விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்களுக்கு இடையே ஒரு யுகமும், திட்டமும், யுக்தியும் திட்டமும் இருக்கிறது. அதை பற்றி இன்றைய எபிசோடில் பார்க்கலாம் என சொல்ல, ரசிகர்கள் கமல்ஹாசன் வந்து உற்சாகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!