விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கஸ்தூரிக்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன கண்ணன்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கஸ்தூரிக்கு இன்று பிறந்தநாள் - வாழ்த்து சொன்ன கண்ணன்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கஸ்தூரிக்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன கண்ணன்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கம்பம் மீனா. அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கம்பம் மீனா:

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் அண்ணியாகவும், பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் வேலை செய்யும் செல்வியாகவும், நடித்து வருபவர் நடிகை மீனா செல்லமுத்து. அதுமட்டுமில்லாமல் தேன்மொழி பி.ஏ.,யில் பவானி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியலில் அறிமுகமாகி மணிரத்தினம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து அதன் பின் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

சன்யாசத்தை தேடி சென்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவண விக்ரம் & விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவியில் முன்னணி சீரியல் ஒன்றில் அவர் நடித்து வருகிறார். அவரது பளீர் குரல் மற்றும் எதார்த்தமான நடிப்பால் ஏகப்பட்ட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது. இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாள் அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருடன் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம் அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து தனது திறமையால் பல சீரியல்களில் நடித்து வருகிறார் இவர்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலியுடன் மீண்டும் இணைந்த அகிலன் – வெளியான வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இவர் சீரியல் மட்டுமல்லாமல் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா என பல படங்களிலும், மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுபட்டி, களவாணி, மாத்தி யோசி, ராவணன், கடல் போன்ற படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கம்பத்தை சொந்த ஊராக கொண்ட அவர் வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார். திறமைக்கு படிப்பு ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கு பல ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here