“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலியுடன் மீண்டும் இணைந்த அகிலன் – வெளியான வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் அஞ்சலியுடன் மீண்டும் இணைந்த அகிலன் - வெளியான வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலியுடன் மீண்டும் இணைந்த அகிலன் – வெளியான வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோ, ஹீரோயினிற்கு அடுத்தபடியாக பிரபலமான ஜோடி தான் அகில் அஞ்சலி ஜோடி. அகில் சீரியலில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் அஞ்சலியுடன் இணைந்து மீண்டும் ‘ஹோரா’ வெப் சீரிஸ் நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்:

பாரதி கண்ணம்மா தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. சீரியலில் கதாநாயகி மாற்றத்திற்கு பின்னர் கூட TRPயில் முதலிடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது. இந்த சீரியல் பாரதி, கண்ணம்மா ஜோடியை மையமாக கொண்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா ஜோடியை விட மக்களிடம் பிரபலமான மற்றொரு ஜோடியும் சீரியலில் இருக்கிறது. அது தான் அகில் அஞ்சலி ஜோடி. முன்னதாக அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் மற்றும் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி ஜோடிக்கு தான் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற பரிசாக சந்தியாவிடம் காதலை வெளிப்படுத்திய சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!

ஆனால் சினிமா வாய்ப்புகள் அதிகமாக வந்ததன் காரணமாக அவர் சீரியலில் இருந்து விலகினார். தற்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அகிலன் கண்மணி ஜோடி ரசிகர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் மீண்டும் பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பில்லை என்பதால், இருவரும் இணைந்து புதிதாக ஒரு வெப் சீரிஸ் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘செம்பருத்தி’ ஷபானா, நடிகர் ஆர்யனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு? ரசிகர்கள் ஷாக்!

அந்த வெப் சீரிஸ் பெயர் ஹோரா என்பதாகும். இந்த சீரிஸிஸ் பார்த்த ரசிகர்கள் இந்த அழகான ஜோடியை மீண்டும் திரையில் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தற்போது அகில் கதாபாத்திரத்தில் சுகேஷ் என்பவர் நடித்து வருகிறார். அவரும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!