சன்யாசத்தை தேடி சென்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவண விக்ரம் & விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து!

0
சன்யாசத்தை தேடி சென்ற 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சரவண விக்ரம் & விஜே தீபிகா - ரசிகர்கள் வாழ்த்து!
சன்யாசத்தை தேடி சென்ற 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சரவண விக்ரம் & விஜே தீபிகா - ரசிகர்கள் வாழ்த்து!
சன்யாசத்தை தேடி சென்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவண விக்ரம் & விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் மற்றும் அவரது தோழி விஜே தீபிகா இருவரும் சேர்ந்து தங்கள் சேனலில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

புதிய வீடியோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி, தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகின்றனர். சரவண விக்ரம் மற்றும் விஜே ஐஸ்வர்யா. சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தின் ஜோடியாக வந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபிகா. இவருக்கு மேக்கப் போடுவதால் ஏற்பட்ட சரும அலர்ஜி காரணமாக முகம் முழுவதும் அதிக பருக்கள் இருந்தது. இதனால் இவரை சீரியலை விட்டு நீக்கிவிட்டனர். ஆனாலும் சரவணவிக்ரம் மற்றும் தீபிகா இடையிலான நட்பு சீரியலை தாண்டியும் தொடர்ந்து வருகிறது. இவர்கள் இருவரும் தனித்தனியாக அவர்கள் பெயரில் யூடுயூப் சேனலை நடத்தி வருகின்றனர்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலியுடன் மீண்டும் இணைந்த அகிலன் – வெளியான வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இந்த சேனலில் இவர்கள் இருவரும் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவை அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட ஆபீஸ் டூர் வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் சென்றது. அந்த வகையில் தற்போது தீபிகா சேனலில் இவர்கள் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், இருவரும் சேர்ந்து கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு ஆன்மீக தளத்திற்கு சென்றுள்ளனர். பாலமலை என்னும் பெயர் கொண்ட அந்த மலையின் மீது இருக்கும் கோயிலின் வரலாற்றையும், புராணக்கதையையும் கண்ணன் கூறியுள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற பரிசாக சந்தியாவிடம் காதலை வெளிப்படுத்திய சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!

இவர்கள் கண்ணனின் நண்பர்களோடு அங்குசென்று போட்டோஷூட் நடத்தியுள்ளனர். மேலும் அங்கு உள்ள ஒரு ஒத்தையடி பாதையில் சென்று சித்தர் கோயில் ஒன்றையும் பார்த்துள்ளனர். இதை பற்றி மிகவும் கலகலப்பாகவும், வழக்கம் போல் சண்டையோடும் வீடியோவை முடித்தனர். இவர்களின் இந்த சன்யாசத்தை தேடிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் ஜோடி சூப்பர் என்றும், இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து இதேபோல் பல வீடியோக்களை வெளியிட வேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!