தூக்கு மாட்டிக் கொண்டு சர்ச்சையில் சிக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – வைரலாகும் வீடியோ! நெட்டிசன்கள் கருத்து !

0
தூக்கு மாட்டிக் கொண்டு சர்ச்சையில் சிக்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா - வைரலாகும் வீடியோ! நெட்டிசன்கள் கருத்து !
தூக்கு மாட்டிக் கொண்டு சர்ச்சையில் சிக்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா - வைரலாகும் வீடியோ! நெட்டிசன்கள் கருத்து !
தூக்கு மாட்டிக் கொண்டு சர்ச்சையில் சிக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – வைரலாகும் வீடியோ! நெட்டிசன்கள் கருத்து !

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி தம்பிக்கு ஜோடியாக நடித்து ஓரளவு பிரபலமாகிய நடிகை தீபிகா தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை குறித்து நெட்டிசன்கள் கூறும் கருத்துக்கள் பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவி தீபிகா:

விஜய் டிவி சீரியல்களில் படு சூடாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நான்கு அண்ணன் தம்பிகளில் கடைக்குட்டியான கண்ணனின் காதலி ஐஸ்வர்யாவாக அறிமுகமாகியவர் தான் விஜே. தீபிகா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட காட்சிகள் சீரியலை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கியது. ஏனென்றால் ஐஸ்வர்யா கண்ணன் ஜோடி மக்களால் அதிக அளவில் விரும்பி வரவேற்கப்பட்டது.

ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அம்மா, மகள் பாசப்போராட்டத்துடன் புதிய தொடர்!

அதன் பிறகு திடீரென ஐஸ்வர்யா வாக நடித்து வந்த தீபிகா மாற்றப்பட்டார். அதற்கு காரணம் முகப்பரு தான் என்று சொல்ல பட்டு வந்தது. ஏற்கனவே ஐஸ்வர்யா ரோல் மாற்றப்பட்டு தான் தீபிகா வந்தார். ஆனால் சில காரணத்தால் மீண்டும் மாற்றப்பட்டு அந்த கதாபாத்திரத்தில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்த சாய் காயத்ரி தற்போது நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் தீபிகா அவரது யூடியூப் சேனலில் அழகு குறிப்புகள், ஊர் சுற்றுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேலான ரசிகர்களை சப்ஸ்கிரைப் செய்ய வைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது ஒரு ஷார்ட்ஸ் வீடியோவில், காமெடி நடிகர் செந்தில் தூக்கு மாட்டிக் கொள்வது போல் நடித்து, அவா அவா என்று பாடி கவுண்டமணியை வெறுப்பேற்றும் காட்சியை இவரும் விளையாட்டாக செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த அனைவரும் விஜே தீபிகா இவ்வாறு வீடியோ வெளியிட்டு இருப்பதை நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், ஜாலியான வீடியோவாக இருந்தாலும், இப்படியான வீடியோவுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!