‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகாவின் சொந்த ஊரில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' விஜே தீபிகாவின் சொந்த ஊரில் நடந்த விசேஷம் - வைரல் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' விஜே தீபிகாவின் சொந்த ஊரில் நடந்த விசேஷம் - வைரல் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகாவின் சொந்த ஊரில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ!

விஜய் டிவியின் சீரியலில் நடித்து அதிக அளவில் பிரபலம் ஆன நடிகை விஜே தீபிகா தனது சொந்த ஊரில் நடந்த விசேஷத்திற்கு சென்று அங்கிருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விஜே தீபிகா:

விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து விட்டாலே நடிகர், நடிகையர் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகின்றனர். இதனால் தான் பலரும் விஜய் டிவியின் நட்சத்திரமாக கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் கைப்பற்றி வருகின்றனர். அது அவர்களின் நடிப்பு துறையின் அடுத்த கட்ட பயணத்திற்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறது. விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் தற்போது சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலங்கள் ஆக மாறியுள்ளது தான் இதற்கு சாட்சி.

கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் பாரதி & வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அந்த வகையில் விஜய் டிவியின் முக்கிய சீரியலாக உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில மாதங்கள் மட்டுமே நடித்து அதிக அளவில் பிரபலமானவர் விஜே தீபிகா. இவர் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் தீபிகா தற்போதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமாக தான் மக்கள் மத்தியில் அறியப்படுகிறார். இவர் தனியாக நடத்தி வரும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

விஜய் டிவி பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய “சுந்தரி” சீரியல் – TRP ரேட்டிங் லிஸ்ட்!

தற்போது அதில், தனது சொந்த ஊரில் நடந்த ஒரு புது வீட்டின் பால் காய்ச்சும் விழாவிற்கு சென்று அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ முழுவதும் தீபிகாவுடன் அவரது நண்பர் சீனு இருந்தார். கிராமத்துகளில் இருக்கும் வீடு மற்றும் அவர்களின் பழக்கம் பற்றியும் அதில் கூறியுள்ளார். தன் அப்பாவுடன் சேர்ந்து மாடுகளை அழைத்து வரவும் தீபிகா சென்றிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதனை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!