கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் பாரதி & வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா பிறந்தநாள் விழாவிற்கு பாரதி வருவாரா என ட்விஸ்ட் உடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் மீண்டும் கண்ணம்மா பாரதி பிரிந்து இருக்கின்றனர். பாரதி வெண்பாவுடன் சேர்ந்து கண்ணம்மாவை மீண்டும் வெறுக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் லட்சுமி அப்பா இல்லை என வருத்தத்தில் இருக்க பார்க்கும் அனைவரும் அப்பா இல்லை என குறை சொல்கின்றனர். அதனால் லட்சுமியின் அப்பாவை என் பிறந்தநாள் விழாவில் காட்டுவேன் என கண்ணம்மா சபதம் போடுகிறார். அதை கேட்டு லட்சுமி சந்தோஷத்தில் அப்பாவை பார்க்க பல ஏற்பாடுகளை செய்கிறார்.
‘பாக்கியலட்சுமி’ கோபி சதீஷ் யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள் இதோ! ரசிகர்கள் ஷாக்!
அப்பாவிற்காக புது சட்டை, வீடு முழுவதும் அலங்காரம், வாசலில் கோலம் என பல வேலைகளை செய்கிறார். லக்ஷ்மியின் ஆசையை பார்த்து கண்ணம்மா இரண்டு முறை பாரதியிடம் பேச போக பாரதி நான் வர முடியாது என சொல்கிறார். ஆனால் எப்படியாவது பாரதியை வர வைக்க வேண்டும் என கண்ணம்மா நினைக்கிறார். சௌந்தர்யா எவ்வளவோ சொல்லியும் பாரதி கேட்பதாக இல்லை. இங்கே இருந்தால் கண்ணம்மா பிறந்தநாளுக்கு கூட்டிக் கொண்டு செல்வார்கள் என்பதால் ஹைதராபாத் செல்ல முடிவு செய்கிறார்.
விஜய் டிவி பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய “சுந்தரி” சீரியல் – TRP ரேட்டிங் லிஸ்ட்!
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கண்ணம்மா பாரதியை பார்க்க போக அங்கே உங்களிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும் நீங்க கட்டாயம் வர வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார். ஹேமா பற்றிய உண்மையை சொல்ல போவதாக மனதிற்குள் நினைக்க அதை கேட்டு பாரதி என்ன செய்வார் என்பதே அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட்டாக இருக்க போகிறது. இந்நிலையில் கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குடும்பத்துடன் பாரதி மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.