“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் குமரன் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்! சிறந்த நடிகருக்கான விருது!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" கதிர் குமரன் செய்த சாதனை - குவியும் வாழ்த்துக்கள்! சிறந்த நடிகருக்கான விருது!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் குமரன் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்! சிறந்த நடிகருக்கான விருது!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன். அவர் தற்போது சிறந்த நடிகருக்கான அவார்ட் ஒன்றை பெற்று அந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார்.

நடிகர் குமரன்:

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. சீரியல்களில் நடிக்கும் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அவர்கள் புகழின் உச்சிக்கு செல்லும் அளவிற்கு சீரியல் கதை அமைந்துள்ளது. இந்நிலையில் குடும்ப கதை கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன், தம்பிகளுக்கு நடுவே நடக்கும் பாசப் போராட்டத்தை வெளிப்படையாக காட்டுகிறது. இந்த சீரியலில் மூத்த அண்ணனாக மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்டாலின் நடித்து வருகிறார். இரண்டாவது அண்ணன் ஜீவா கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் நடிக்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்க அருண் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

மூன்றாவது தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் நடித்து வருகிறார். கதிர், முல்லை ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மற்ற சீரியல்கள் போல் இல்லாமல் கதிர், முல்லை காதல் காட்சிகள் வயதிற்கேற்ற பக்குவத்துடன் இருக்கும். நடிகர் குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு முன்னர் சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான், இவர் சீரியல் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார்.

ஆலியா மானஸாவின் கர்ப்பத்தினால் ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஏற்படப்போகும் மாற்றம்? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குமரன் Feb Stars Iconic Award நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் என்ற விருதை வென்றுள்ளார். அந்த விருது குறித்த புகைப்படத்தை குமரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இன்ஸ்டாவில் ஏகப்பட்ட பாலோயர்ஸ் கொண்ட குமரனின் இந்த விருதை பாராட்டி பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!