“பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்க அருண் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் நடிக்க அருண் வாங்கும் ஒரு நாள் சம்பளம் - ஷாக் ரிப்போர்ட்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்க அருண் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அருண் பிரசாத் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கண்ணம்மாவை தொடர்ந்து அவரும் சீரியலில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.

பாரதி கண்ணம்மா அருண்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி இடம் உண்டு. அதில் தொடர்ந்து முதலிடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகை ரூபா ஸ்ரீ, நடிகை ஃபரீனா , நடிகை கண்மணி, நடிகர் ரிஷி கேசவ் ஆகியோர் நடித்து வருகின்றனர். பாரதி கதாபாத்திரத்தில் நடிகர் அருண் பிரசாத் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பு திறமையால் அவருடைய சொந்த பெயரை மறந்து இருக்கும் அளவிற்கு அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

ஆலியா மானஸாவின் கர்ப்பத்தினால் ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஏற்படப்போகும் மாற்றம்? ரசிகர்கள் ஷாக்!

அருண் பிரசாத்தின் சொந்த ஊர் சேலம் ஆகும். ஆனால் அவர் சென்னைக்கு வர வேண்டும் என்பதை ஆசையாக வைத்திருந்தார். அதற்கு காரணம் அவருக்கு கல்லூரி படிக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்ததாம், அதற்காக சென்னை கிறித்தவ கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்தாராம். பின் பல குறும்படங்களில் கல்லூரி படிக்கும் போதே அவர் நடித்திருக்கிறார். இவருடைய முதல் குறும்படம் நிகழ்காலம் என்பதாகும். அதன் பின் ஏனோ வானிலை மாறுதே, மதி மயங்கினேன், கள்ளன், ஏதோ மாயம் செய்தாய், யானும் தீயவன், பகல் கனவு போன்ற பல குறும்படங்களில் நடித்திருக்கிறார்.

Vijay TV Bigg Boss 5 | தலைவர் நிரூப் பேச்சை மதிக்காத போட்டியாளர்கள், பழிவாங்கும் திட்டமா? ஷாக் ப்ரோமோ!

அதன் பின் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் நடிகர் வைபவ் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தில் நடித்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை காட்டி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதலில் இந்த சீரியலில் நடிக்க அவருக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன் பின் சீரியல் நல்ல ரீச் ஆன நிலையில் தற்போது அவர் ரூ.20000 சம்பளம் பெறுகிறார். மேலும் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி மற்றும் அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் ஆகியோருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அருண் சினிமா வாய்ப்பு தேடுவதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!