PAN கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை – மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.10000 அபராதம்!

0
PAN கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை - மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.10000 அபராதம்!
PAN கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை - மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.10000 அபராதம்!
PAN கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை – மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.10000 அபராதம்!

நாடு முழுவதும் உள்ள மக்கள் வங்கி சேவைகளை செய்ய தங்களது ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் பல முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

பான் ஆதார் இணைப்பு:

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி நாடு முழுவதும் உள்ள மக்கள் வங்கி குறித்த சேவைகளை பெற ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இந்த அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் அதற்கான கால அவகாசமும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக வெளியிட்ட அறிவிப்பில் இந்த நிதியாண்டின் முடிவுக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது மார்ச் 31 ஆம் தேதிக்குள் மக்கள் அனைவரும் இணைந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ. 10,000 வட்டியில்லா பண்டிகை முன்பணம்?

பான் கார்டுகள் என்பவை தனிமனிதனின் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிதி மோசடிகளைத் தடுக்கவும் பயன்படுகின்றன. ஆனால் பலர் இதை வெறும் அடையாள ஆவணமாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு விவரங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசின் அறிவிப்பை பலர் காதில் வாங்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் கால அவகாசத்திற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் அவர்கள் வங்கிச் சேவைகளைத் தொடர்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்படும் என இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது.

IAS & IPS அதிகாரிகளின் சம்பளம் & சலுகைகள் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்கள் வெளியீடு!

அதனை தொடர்ந்து மற்றொரு பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைப்பது ஆன்லைன் மூலமாக சுலபமாக செய்யலாம். https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வெப்சைட்டில் சென்று, பான் ஆதார் விவரங்களைக் கொடுத்து இணைக்கலாம். அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டாலே போதும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!