ஆதார், பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31ம் தேதி கடைசி நாள்!

0
ஆதார், பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மார்ச் 31ம் தேதி கடைசி நாள்!
ஆதார், பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மார்ச் 31ம் தேதி கடைசி நாள்!
ஆதார், பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31ம் தேதி கடைசி நாள்!

இந்தியாவில் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பான் கார்டு இணைப்பு:

இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணங்களுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். அத்துடன் பணப்பரிவர்த்தனை மற்றும் வருமான வரித் தாக்கல் தொடர்பான சேவைகளுக்கு பான் கார்டு மிகவும் முக்கியமானது ஆகும். தற்போது ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி தேதிக்குள் பான் கார்டு இணைக்கவில்லை என்றால் ரூ.1000 தொகையை தாமத கட்டணமாக செலுத்த வேண்டும்.

Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் பான் கார்டுகளை பயன்படுத்த முடியாது. மேலும் பான் கார்டுகள் செயலற்றதாகி விடும். அத்துடன் செயலற்ற பான் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ரூ.10000 தொகையை வருமான வரிச் சட்டம் பிரிவு 272பி கீழ் அபராதமாக வசூலிக்கப்படும். அத்துடன் இந்த செயலற்ற பான் கார்டு மூலமாக பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய முடியாது. இதனை பயன்படுத்தி புதிய வங்கிக் கணக்குகளை தொடங்க முடியாது.

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

தற்போது ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளது. முதலில் வருமான வரித்துறையின் அதிகாரபூர்வமான இணையதளத்தை பயன்டுத்தி இணைக்கலாம். இதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. முதலாவதாக வருமான வரித்துறையின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் சென்று அதில் உள்ள முகப்புப் பக்கத்தில் ‘Link Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2. இதற்கு அடுத்த பக்கத்தில் பான் எண், ஆதார் எண், தங்கள் பெயர் மற்றும் தங்கள் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.

3. அதன் பின் திரையில் இருக்கும் captcha குறியீட்டை உள்ளிட வேண்டும். அதன் பின் OTP ரெக்வஸ்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

4. இந்த OTP எண்ணை உள்ளிட்டு ‘Link Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. இறுதியாக தங்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டது.

அடுத்ததாக sms மூலமாக ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

1. முதலில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைலை இதற்கு பயன்படுத்த வேண்டும்

2. இதில் UIDPAN என்று டைப் செய்து அடுத்த ஆதார் எண்ணின் 12 இலக்க எண்ணை உள்ளிட வேண்டும்

3. அதன் பின் 10 இலக்க பான் எண்ணை உள்ளிட வேண்டும். அதாவது UIDPAN <12digitaadhaar> <10digitpan> என்று டைப் செய்ய வேண்டும்.

4. இந்த SMS ஐ 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

5. இறுதியாக ஆதார் கார்டுடன் பான் கார்டு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here