நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 – உணவுத்துறை அமைச்சர் உறுதி!

0

தமிழக சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நெல் ஆதார விலைக்கான வாக்குறுதி குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.

நெல் ஆதார விலை:

தமிழக சட்டப்பேரவை ஆனது கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. 19ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நெல்லுக்கான ஆதார விலை ரூபாய் 2500 தருவதாக திமுக அளித்திருந்த வாக்குறுதி குறித்து கேள்விகளை எழுப்பினார். அதன் பிறகு பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல்லுக்கு ஒரு குவிண்டால் ஆதார விலை ரூபாய் 1910 ஆக வழங்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் வரப்போகும் புதிய மாற்றம் – 1 மணி நேரம் மட்டுமே வகுப்பு!!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆதார விலை தற்போது ரூபாய் 2310 ஆக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் தேர்தல் அறிக்கையில் கூறியது போல நெல் ஆதார விலை ரூபாய் 2500 ஆக வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கூடுதலாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்காத பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அரசு மக்களின் நலன் கருதி நிறைவேற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!