தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் – ஆகஸ்ட் 2 முதல் துவக்கம்!!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் - ஆகஸ்ட் 2 முதல் துவக்கம்!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் - ஆகஸ்ட் 2 முதல் துவக்கம்!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் – ஆகஸ்ட் 2 முதல் துவக்கம்!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு, ஆன்லைன் கல்வி, கற்பித்தல், இணையம் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளை மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு, ஆன்லைன் கல்வி, கற்பித்தல், இணையம் பயன்படுத்தல் போன்றவற்றிற்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 2 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இதற்காக ஒவ்வொரு ஆசிரியருக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு Word Document மற்றும் PDF உருவாக்குவது, இ-மெயில் அனுப்புவது, வகுப்பறைகளில் ஆன்லைன் வீடியோக்களை எப்படி பயன்படுத்துவது போன்றவற்றை கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 7,000 உயர்தர ஆய்வகங்கள் மூலம் நடத்தப்பட உள்ளன.

இந்த பயிற்சி மூலமாக தனியார் பள்ளி மாணவர்களை போல அரசு பள்ளிகளில் பயிலும் 50 லட்சம் மாணவர்களும் தரமான கல்வி ஆன்லைன் மூலமாக பெற முடியும். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பள்ளிகளில் 90 ஆயிரம் கணினிகள் இணைய வசதியுடன் உள்ளன. அதனால் அரசு பள்ளிகளில் தரவுகளை உருவாக்குதல் முதல் அவற்றை பயன்படுத்துதல் வரை அனைத்தையும் ஆன்லைனிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் தரவுகளை ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பதுகுறித்தும் பயிற்சி வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் EMIS-ல் எப்படி தரவுகளை சேமித்து வைப்பது பற்றியும் பயிற்சி வழங்கப்படும் எனவும் EMIS-ல் தான் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் முழு விவரங்களும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு முன்னதாக, அவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ள மாவட்ட கருத்தாளர்களுக்கு இன்று (ஜூலை 26) முதல் 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் 40ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும் எனவும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 2மணி முதல் 4 மணி வரை பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here