முழு ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 2 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
முழு ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 2 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
முழு ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 2 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
முழு ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 2 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா 2 ஆம் அலை தொற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிப்பதாக கோவா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

மாநிலம் தழுவிய கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டித்து கோவா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் பேரலையாக உருவான கொரோனா 2 ஆம் அலை தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவாவில் மே மாதம் 9 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதனிடையே கோவாவின் கடலோர பகுதிகளில் உள்ள தொற்று நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வு வயது குறைப்பு மறுபரிசீலனை – அரசுக்கு கோரிக்கை!

அந்த வகையில் தற்போது மாநிலம் தழுவிய பொது முடக்கமானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், கோவா மாநில அரசு கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை ஜூலை 26 வரை நீட்டித்தது. இருப்பினும் 50% திறன் கொண்ட பார்கள் மற்றும் உணவகங்களைத் திறக்கவும், 50% திறனுடன் ஜிம்களை திறக்கவும், 15 பேர் வரை கூடும் மத வழிபாட்டு தலங்களை திறக்கவும் மாநில அரசு அனுமதி அளித்தது.

TN Job “FB  Group” Join Now

தவிர கடைகள் மற்றும் மால்கள் தினசரி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று (ஜூலை 25) ஒரு நாளில் 149 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,158 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here