SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Online மூலம் Branch மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!

0
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - Online மூலம் Branch மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - Online மூலம் Branch மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Online மூலம் Branch மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் வங்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் ஆன்லைன் மூலம் செயல்படுத்த பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.

SBI வங்கி:

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) இயங்கி வருகிறது. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது SBI வங்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் வகையில் வசதிகளை வழங்கி வருகிறது. இதற்கு பிரத்யேக மொபைல் ஆப் (YONO) அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆப் மூலம் Loan, Transaction உள்ளிட்ட அனைத்து விதமான செயல்பாடுகளையும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ள முடியும்.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்! ஓமைக்ரான் எதிரொலி!

அந்த வகையில் தற்போது SBI தனது வாடிக்கையாளர்கள் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கான வசதியை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. இதனை YONO SBI, YONO LITE அல்லது Online SBI மூலம் உடனடியாக செய்துகொள்ளலாம். இந்த வசதியை உங்களது வங்கி கணக்குடன் இணைத்த மொபைல் எண் இருந்தால் மட்டுமே பெற முடியும். தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் முறையில் வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றம் செய்வது குறித்த எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ஆன்லைன் முறையில் கிளை மாற்றம் செய்வதற்கான வழிமுறை:

1. முதலில் www.onlinesbi.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் தோன்றும் SBI முகப்பு திரையில் உங்களது User Id மற்றும் Password கொடுத்து Login செய்ய வேண்டும்.

3. அதன்பின் e – Service என்ற தேர்வை க்ளிக் செய்து அதில் Transfer Savings என்ற மெனுவை க்ளிக் செய்ய வேண்டும்.

4. நீங்கள் மாற்ற வேண்டிய கணக்கை தேர்வு செய்ய வேண்டும். ஒரேயொரு கணக்கு வைத்திருந்தால் தானாகவே அது தேர்வாகி விடும். பின்னர் உங்களது வங்கியின் கிளை எண்ணை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Terms And Conditions க்ளிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.

5. உங்களது வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரிசெய்து கொண்டு Confirm என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின் உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP கொடுத்து Submit கொடுக்க வேண்டும்.

6. அதன்பின் Your branch transfer request has been successfully registered என்ற செய்தி உங்களது திரையில் தோன்றுவதை நீங்கள் காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!