விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் விஜே அர்ச்சனா யார் தெரியுமா? ஆங்கர் டூ வில்லி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ராஜா ராணி 2" சீரியல் விஜே அர்ச்சனா யார் தெரியுமா? ஆங்கர் டூ வில்லி!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் விஜே அர்ச்சனா யார் தெரியுமா? ஆங்கர் டூ வில்லி!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் வில்லியாக அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. அவருடைய சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜே அர்ச்சனா:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆல்யா மானசா மற்றும் சித்து ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் சீரியலில் ஹீரோவின் தம்பி மனைவி மற்றும் வில்லியாக நெகட்டிவ் ரோலில் விஜே அர்ச்சனா நடித்து வருகிறார். அவர் முதன்முதலில் ஆதித்யா சேனலில் ஆங்கராக அறிமுகமானார். அதன் மூலம் அவருக்கு ராஜா ராணி 2வில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பாரதி கண்ணம்மா” சீரியல் அருண் பிரசாத் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

இவர் சொந்த ஊர் சென்னை, இவரது அப்பா கல்லூரி பேராசியரியர் ஆவர். இவர் இன்ஜினியரிங் படித்து இருக்கிறார். சிறு வயதில் இருந்தே ஆங்கராக வேண்டும் என்ற ஆசையால் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். டப்ஸ்மேஷ், டிக்டாக் போன்ற ஆப்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். இவர் முதன் முதலில் நடிக்க வரும் போது ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தால், அப்பா திட்டுவார் என சொன்னாராம். இதுவரை சீரியல், வெப்சீரிஸ் என பல ப்ராஜெக்ட்களில் இவர் நடித்திருக்கிறாராம்.

ஜீ தமிழ் “சத்யா 2” சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!

அவற்றில் இவர் உடன் நடித்த நடிகர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததாக சொன்னார்களாம். அதனால் அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் அவர் நடிக்க எந்த தடையும் சொல்வதில்லை என சொல்லி இருக்கிறார். மேலும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வருவதால் மற்ற சீரியல்கள் பற்றி அவர் நினைக்கவில்லையாம். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் அவர் படங்களில் கட்டாயம் நடிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!