இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!

0
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி - பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி - பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!

இந்தியாவில் இதுவரை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இருவருக்கு உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் தொற்று:

உலகின் பல்வேறு நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலுக்கி வரும் கொரோனா தொற்று முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் உருவானது. இந்த கொரோனா பெருந்தொற்றால் இந்தியா, அமெரிக்கா, உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டன. பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தின. இருந்த போதிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வகைகளாக ஆல்பா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல தொற்றுகள் பரவத் தொடங்கின.

Post Office இன் சிறந்த திட்டம் – தினமும் 95 ரூபாய் செலுத்தினால் ரூ.14 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை கொரோனா தொற்றுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று இதுவரை ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 34 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய தகவல்!

அதனை தொடர்ந்து இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் பகுதிக்கு ஜிம்பாவே நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here